Your comments

Saturday, October 8, 2011

தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர் விலக்க நடவடிக்கை



அடக்குமுறைகளுக்கு எதிரான சமுதாயக்குரல்
தக்கலை அபீமுஅ ஜமாத்தில் தவ்ஹீது  , கத்னாமற்றும்  திருமணங்கள் போன்றவைகள் தங்கள் பாரம்பரிய சுன்னத்துல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் முறைகளுக்கு ஒத்துவரவில்லை என்றால் ஊர் விலக்கம்,. திருமண ரெஜிஸ்டர்   தர மறுத்தல் உறவினர்களின் திருமணங்களில் ... கலந்து ...கொள்வதை .....தடைசெய்தல்,..இறந்தவர்களை... ...
அடக்கம்...... செய்ய   அனுமதி   மறுத்தல் போன்ற இஸ்லாமிய சமுதாய விரோத செயல்களான இந்த அநியாய நடவடிக்கைகளை வக்பு  வாரியத்தின்  சட்டங்களையும்   மீறி  ஜமாஅத் மக்கள்மேல் எடுத்து  வருகிறார்கள் . இந்த அநியாயமான நடவடிக்கைகளை.எடுத்து  வரும் தக்கலை ..அபீமுஅ..ஜமாஅத்... நிர்வாகத் திற்கு உங்கள்  கருத்துக்களை இங்கே பதிவதின் மூலம்  உங்கள் குரல்களை ஓங்கிஒலிக்கவும் அதன் மூலம்.....ஒழிக்கவும்...முன்வாருங்கள்............
................. 
நான் ஜமாஅத்துக்கு எழுதிய பரபரப்பு கடிதம் இதோ இந்த லிங்கில் 
https://docs.google.com/viewer?&a=v&pid=explorer&chrome=true&srcid=0B7ZvPeJun4BaMjIwMWIwMTItYTc4YS00NTljLTk2MGYtZGViZjNmYjlmZGU1&authkey=CMfolY0I

hl=en_US&pli=1
பாதிக்கப்பட்டவர்களின் நியாயக்குரல்

39 comments:

Anonymous said...

Assalamu Alaikkum

The action taken by the jamath is highly unethical. How the action is taken by them even before receiving his response. Is the Jamath going to answer all his questions? If they say all that happens in the jamath in the name of kalacharam are in the way of Qran & Sunnah, they should reply with evidences from Qran & Sunnah (not from books written by any auliya’s…!!!), If they cannot do this, it's very evident that do accept all these are Bid'aths and they are pushing the entire community in the hell fire. May Allah save our community from the Hell Fire.

Peer Mohamed
Bahrain
peer_mohd77@yahoo.com

Asalamsmt said...

அலைக்கும் அஸ்ஸலாம்.

சகோ. H கெளஸ் முஹம்மது s/o Haji K. ஹாஜாமைதீன்

தக்கலை ஜமாஅத் நிர்வாகத்தின் நோட்டீஸ் கண்டோம்.

அப்படி என்றால் ஜமாஅத்தில் இருக்கும் 100 க்கு 100 பேரும், அங்கு அடங்க பட்டு இருக்கும் மாமேதை பீர்முஹம்மது சாகிப் - சன்னிதானத்தில், அவர்கள் பெயரால், நடக்கும் பித் அத் களுக்கும், இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரக நடக்கும் அனாச்சாரம்களுக்கு ஒத்து போக கூடிய வர்களைத்தான், சமுதாய உறுப்பினர்களாக வைப்பார்களா!!!!!!!! ????????

1430 ஆண்டுகளுக்கு முன்னர் கபரு வணங்கியவர்களை எதிர்த்து போராடிய அண்ணல் பெருமகனார் நபி (ஸல்) வாழ்க்கையை இவர்கள் நினைத்து பார்க்கவே மாட்டார்களா?

யாருடைய வயற்று பிழைப்புக்காக இவர்கள் மாமேதை பீர் முஹம்மது சாகிப் பெயர் சொல்லி கொண்டு, ஆண்டு தோறும் நடக்கும் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும், நபி சொல்லி தராத வழி முறைகளுக்கு எதிராகவும், வயற்று பிழைப்புக்காக இவர்களே, அந்த மகான் அப்படி சொன்னார், இவர் இப்படி சொன்னார் என்று இவர்களே எழுதி வைத்துக்கொண்டு நடத்தும் கலாச்சாரத்திற்கு ஒத்து போனால் தான் சமுதாய உறுப்பினர் ஆக முடியும் என்றால்!!!!!!!!!!!!!!!!!!!!!! சிரிப்பாகத்தான் இருக்கிறது தக்கலை ஜமாத், உங்களுக்கு அனுப்பிய கடிதத்தின் சராம்சம்.

அன்று 1430 ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணல் நபி போராடி வெற்றி பெற்ற இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை, தவ்ஹீத் கொள்கைகளை, இவர்களே அழிக்கும் நிலைமை!!!!!

மகான் பெயர் சொல்லி அட்டூழியம் நடத்தும்
(கன்தூரி, பாட்டு கச்சேரி, மொலூத்.. இப்படி யானை, குதிரை ஊர்வலம்.

1) தக்கலை ஜமாத்
2) திட்டுவிளை ஜமாத்
3) தஞ்சையில் இருக்கும் நாகூர் ஜமாத்

இன்னும் நமக்கு தெரியாமல் பல ஜமாத் கள்.

இது எல்லாம் இஸ்லாத்தை மாற்று மத்ததவர்களுக்கு, நாங்களும் உங்களை சார்ந்தவர்கள் தான் என்றும் பறை சாற்றும் ஜமாத் கள்.

உங்களை மாதிரி ( சகோ.கெளஸ் முஹம்மது) 4, 5 பேர் புறப்படு விட்டால் இந்த ஜமாத் எல்லாம் கூடிய விரைவில் ஆட்டம் கண்டு விடும் இன்ஷா அல்லாஹ்.

1984 ல் தோன்றிய பல இஸ்லாமிய தவ்ஹீத் இயக்கத்திற்கு பின் எவ்வளவு மாற்றம் ஆகியுள்ளது என்று தக்கலை, திருவிதான்கோடு, தேங்காப்பட்டணம், ........ஊர்களை பார்த்து அறிந்துக்கொள்ளலாம். முன்பு எல்லாம் தவ்ஹீத் பற்றி பேச்சு எடுத்தாலே அடி, உதை தான். இன்று பல பேர் உண்மை எதில் இருக்கிறது அறிந்து பெரும் மனம் மாற்றம் ஆகி உள்ளார்கள். ஜமாத் ல் இருக்கும் பல பேர் வெளியில் சொன்னால் ஊர் விலக்கி விடுவார்கள் என்ற பயத்தில் இருக்கிறார்கள்.

உங்களை மாதிரி 4,5 பேர்கள் ஊருக்கு ஊர் புறப்பட்டு விட்டால் இவர்களின் ஆட்டம் எல்லாம் விரைவில் அடங்கி விடும், கூடிய சீக்கிரம் தக்கலை ஜமாத் அல்லாஹ் நமக்கு காண்பித்த குரான், நபி (ஸல்) காட்டி தந்த சுன்னா வழிமுறையில், ஆட்கொள்ளும் காலம் விரைவில் வரும் என்றும் நம்புகிறோம் இன்ஷா அல்லாஹ்!

அல்லாஹ் மேன் மேலும் உங்களுக்கு நல் வழிமுறையையும், தவ்ஹீத் கொள்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அஞ்சா நெஞ்சனாகவும் புறப்பட்டு வெற்றிகொள்ள நாங்கள் வாழ்த்துகிறோம்

ஜசக்கல்லாஹ் கைரன்
அன்பு சகோதரன்
அசலம்
kingdom of bahrain

Anonymous said...

Dear Brother,

Assalamualikum warahmathullah,

According to islam when we know a message in the light of Quran and sunna we have to practise ourself and preach our neighbours and society like Prophet Ibrahim(Alaihisalam)who done a markable dawa to his family and society with brave and courage even thier parents and society turn against him as quran said.I appreciate your stand in this issue and increase our dawa to take out our brothers and sisters from shirk and Bidaath and get a reward( Jannath )in the hereafter inshallah.May Allah show his right way to all muslim umma.

Regards and salam

Ameen KSA (0500632353)
Mosque street
Thuckalay

Anonymous said...

அன்பு சகோதரன் கௌஸ் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மாதுல்லாஹி வ பரகாதுஹு
ஜமா அத்திற்கு எழுதிய விளக்கக்கடிதம் படித்தேன், மிக நன்றாக இருந்தது. மேலும் அதற்கான பதில் தருவதற்குரிய அறிவு அவர்களுக்கு இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. அந்த அறிவு இருந்தால் அவர்கள் இதற்கு முன்பே தவ்ஹீதை ஏற்றிருப்பார்களே. எது எப்படி இருந்தாலும் தங்களது முயற்சி நல்ல முயற்சி. மேலும் ஜமா அத் என்ன முடிவு எடுக்கும் என்பது முன்பே தெரிந்தது தான்.

ஜமாஅத் உங்களுக்கு தக்க பதில்கள் ஒன்றும் தரப்போவதும் இல்லை. காரணம் அவர்களுக்கு இறைவனைப் பற்றிய பயமோ சுவர்க்கம் நரகத்தைப் பற்றிய பயமோ இல்லை.
ஜமாஅத் நம்மை ஊர் விலக்கம் செய்தால் நமக்கு இறைவன் தருவதை இவர்களால் தடுக்க முடியுமா?

எனவே நாம் நம்முடைய வேலையை செய்து கொண்டிருப்போம்.


அன்புடன்
அப்துல் ஜப்பார்
Dubai

Anonymous said...

Dear Hyder

Assalamu Alaikum WRWB



I have gone through your mail today only. Really I feel shame being an aalim doing nothing in my native place. May Allah help you to go ahead. Particularly I am praying for your father. May Allah give him hidaya. I left office and reached home late on Thursday, so you couldn’t talk to me. You can call me now in office.



Regards

Abdullateef S Uthman

Saudi Arabia

Anonymous said...

assalamu alaikum ghouse bai

THIS IS NOORULAMEEN {S/O} JAMAL ,I READ YOUR REPLY LETTER .SUBHANALLAH

Anonymous said...

Dear Brother Haider,

Assalamu Alaikkum WRWB

Masha Allah...May Allah reward you for your intentions. The action by the APMA Administration is obviously the injustice shown to a fair believer, again. In your reply, you have very much proved the truth in the alite of Holy Quranic verses and the Sahih- Hadeeths. I pray the Almighty to give the blind folded muslim brothers, "Hidayath", hence they convert to follow Islam in its true version. Once, a day would come when people repent for their mistakes of isolating true believers and their families from the societies ending up in cruel injustice to them.

Coming back to your reply, its really a bashing for the anti-islamic customs (Bid'aths) followed evidently by the ignorant muslim brothers. I doubt if the administrators would even bothered to go through the complete letter, ultimately the letter is like preaching to the dump. Still I ibelieve, your letter deserves circulation to our all brothers through the E-media atleast. Truth always prevail even amidst furious opressions and suppressions, history has proven the same.

May the Almighty Allah bless you and increase your Imaan further. May your activities to promote the true path be assisted by Him. May Allah SWT sustain us in the well directed true path as illustrated by our noble Prophet (PBUH).

Mohamed Subhan Sultan
Saudi Arabia

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் கௌஸ் முஹம்மது அவர்களுக்கு அல்லாஹ்
நெஞ்சுறுதியும் கொள்கை வலிமையும் தொடர்ந்து
வழங்கி அவரது முயற்சிக்கு வெற்றியை தருவானாக
- செய்யிது அலி பைசி

Anonymous said...

அன்புச் சகோதரருக்கு, வஅலைக்குமுஸ்ஸலர்ம வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ். அன்புச் சகோதரரே| தவ்ஹீதின் குரல் என்ற பெயரில் மடலிட்டிருக்கும் உங்களைக் குறித்து அறிய ஆவல்.

கடிதத்தைப் படித்து மிகவும் வேதனைக்குள்ளாகிறேன். இந்த சகோதரருக்கு அநீதம் இழைக்கப்பட்டிருக்கிறது. அல்லாஹ் அவருக்கு அழகிய பொறுமையை அருள்வானாக. எனினும் இதை இப்படியே விட்டுவிடக்கூடாது. நமது கொள்கைச் சகோதரர்கள் ஒன்றிணைய வேண்டும். இந்த அக்கிரமத்திற்கு எதிராக கடுமையாகப் போராட வேண்டும். இது தொடரக்கூடாது. இனி ஒரு சகோதரனுக்கு இது போன்ற அநீதம் இழைக்கப்படக்கூடாது. எனவே இதை இப்படியே விட்டு விடாமல் இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வோம். என்னால் ஆன முழு உதவியையும் செய்ய தயாராக இருக்கிறேன். அல்லாஹ்வை மட்டும் வணங்கவேண்டும் என்று குரல் எழுப்பிய சகோதரனுக்கு உதவி செய்ய இப்போதே களமிறங்குவோம். அல்லாஹ்விடம் உதவி வேண்டி செயல்படுவோம். நிச்சயம் அல்லாஹ் வெற்றியைத் தருவான். அவனே இந்த புனித மிகு ரமளானில் ஏழு வானங்களுக்கு அப்பாலிருந்து பத்ருக்களத்தில் முஷ்ரிக்குகளைத் தோற்கடித்தவன். அல்லாஹ்வை வணங்குபவர்களுக்கும் பீர்முஹம்மதை வணங்குபவர்களுக்கும் இடையே ஆன கொள்கைப்போர் இது. எழுங்கள் இப்போதே களமிறங்குவோம்.

தயவு செய்து என்னைத் தொடர்பு கொள்ளவும் 33825671

தேங்காய்ப்பட்டினம் முஹம்மத் பின் அபீபக்கர் ஆல் அப்தில்லாஹ்
இஸ்லாமிய அழைப்பு மையம்
ரிஃபா, பஹ்ரைன்

Asalamsmt said...

அன்பு சகோதரர் முஹம்மது பின் அபீபக்கர் அல் அப்தில்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

சகோ.ஹவுஸ் பாய் தான். அவர். தாருல் ஃகுரான் மையத்தில் ஒரு மாணவனாக பயின்று கொண்டும், பெஹ்ரேன் பார்மசியில் வேலை பார்த்துக்கொண்டு இருப்பவரும் தான். அல்லாஹ் வின் பாதையில், நபி(ஸல்) காண்பித்த வழியில், தவறாக சென்று கொண்டு இருக்கும் தன் தக்கலை ஜாமாத்திற்கு எதிராக அறப்போர் செய்து கொண்டு இருக்கும் மாவீரன். நாம் நம்முடைய பதிவை இதில் ஊட்டமாக கொடுத்து, உலகத்தின் மூலை எல்லாம் தவ்ஹீத் என்ன என்பதை பறை சாற்ற ஒரு சந்தர்பம், இந்த தக்கலை ஜாமாத் ஏற்படுத்தி தந்து இருக்கிறது.

அன்புடன்
தாருல் குரான் மையத்தின்
மாணவர்
சகோ.அசலம்

Anonymous said...

Assalamu Alaikum Varahmathullah

APMA had once again being a witness that you are not being one among them who blindly follow your ancestors even if they have shown direct blunders against Quran, Sunnah.

The way APMA behave is unique in this world. Even the quntanamo detainees are given a chance to clarify their side. Here no body cares the right

They can wait for the verdict of Allah SWT if they dont correct themselves and makes thowbah.

There is Alims there or no ?. What they learnt and taught about Islam in their Friday prayers ?

Syed Ali
Bahrain

Anonymous said...

This is completly unjustice action taken by APMA against TAWHEED and definitely Anti Islamic.

The reply is just like a good & sharp slap to the Mushrikeens.....at the same time it is a good lesson for the administrators about their Islamic??? servies?????? to the Jamath. They are in the office only to look after Peerappa's Dhargha and its bida'ath activities. It's really shame on them ..... How can they claim as MUSLIM ?????? Definitely they will have to answer on the day of Judgement.

Regarding the reply, they cannot answer because they themself have no idea what to reply ? and How to reply? as they are in the darkness by the belief of their forefather's ignorance. Let us pray to Allah to give them hidaya.

Your letter deserves a vast circulation to all our muslim brothers.We have already started doing that and Insha Allah, we will continue to do to create more & more public awareness.

May the almighty Allah bless you and increase your Imaan further.

Tawheed Group
bahrain

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,


பெரும்பான்மையான இடத்தில்
சிறுபான்மையாக இருப்பதில் இல்லை பிரச்சனை;
சிறுமைப்பட்டு இருப்பதே!!

தொப்பி இல்லை என்றதால்
துரத்தி அடிக்கப்பட்டோம்;
நெஞ்சில் கட்டியதால்
நெருக்கடிக்கு உள்ளானோம்!!

சுன்னத் என்றோம்;
ஜன்னத் என்றோம்!
மார்க்கம் என்றோம்;
மசியமாட்டோம் என்றோம்!!
மசிந்தா கொடுத்தார்கள் மாநபி ;
மக்கத்து காஃபிருக்கு;
இசைந்து கொடுத்திருந்தால்
இருந்திருக்கலாமே இனிமையாக!!

தூக்கி எறிந்துவிட்டு
தூரதேசம் சென்றார்களே;
கொள்கையினை மட்டும் சுமந்துக் கொண்டு!!
yenave yellam valla allahu (SWT)UNGALUKKU YELLAVIDHATHILUM MANA URUTHIYUM THAIRIYATHAIYUM THANTHU ITHIL VETTI ADAIYA NAM OVARU MANITHARUM PRARTHIPPOM.

BY
UNGAL KOKAIKARAN

Anonymous said...

Assalamu Alaikkum,

Appreciations for breaking the rules to save the community from ignorance . Be happy to be not a part of the Jamath which is not based on Quran & Hadeedh. They would never answer your questions, if they do then they accepted tawheed. If they dont, then they accepted what ever you said is right. Dont give up your efforts. Insha Allah we will succeed.. "Allahu Akbar"

Hallaj Nahvi
Bahrain

Anonymous said...

Dear Br. Ghouse,

Assalamu Alaikum

Alahamdulillah,

Very congratulations for your courage stand on Thowheed(Maasha Allah)

By seeing the notice from the APMA Jamaath the following things are being established.

1. They proclaimed that you are not a member from the group where they are doing all sorts of nonsense in the name of Islam.

2. Secondly they have established you as a true member of Thowheed definitely that has given a promotion in this world and in the Hereafter.

By giving such a verdict they wholeheartedly accepted their failure to prove their principles.

If they really guts enough they should give authentic evidence for their action. But the fact is that even after millions of years they cannot give the true evidences to safeguard their actions(Insha Allah)
مَن يَهْدِ اللَّـهُ فَهُوَ الْمُهْتَدِ ۖ وَمَن يُضْلِلْ


فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُّرْشِدًا18.17

எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.

May the Al Mighty show them the correct way to enter to Paradise

Your like affected brother (since 23 years)

Adam hallaj

Anonymous said...

Assalaamu Alaikkum

Please note down that many brothers mentioned the words 'Verdict', 'Action' etc., For me those Administrators (APMA) can paste on their own Notice Board whatever they want. This kind of Organisation / Body like APMA put themselves under fire and doing some foolish acts (pasting Notice before receiving explanation from brother Ghouse Mohamed). to be a part of that Jamath One Should be 1.Usurer , 2.Drunkard etc., This is What they mean by PAARAMPARIYA NADAIMURAIGAL ? .
It is not for such as join gods with Allah, to visit or maintain the mosques of Allah while they witness against their own souls to infidelity. The works of such bear no fruit: In Fire shall they dwell. (AL QURAN 9:17)
Thus did the (generations) before them say! But all that they did was of no profit to them. (AL QURAN 39:50)
May Allah give him hidaya.

Thawheedkural

Asalamsmt said...

சகோதரர் ஆதம் ஹல்லாஜ்
அவர்களுக்கு 23 வருடம் முன்பே இப்படி பட்ட சோக சம்பவம் நடந்தது அறிந்து மிக்க வேதனை அடைந்தேன். இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கும், இது மாதிரி வேறு ஏதாவது சகோ, சகோதரிகளுக்கு இப்படிபட்ட நிலைமை ஆகி இருந்தால் அவர்களின் வேதனையில் நானும் பங்கு கொள்கிறேன்.

தக்கலை ஜமாத் இன்னும் தன் கொண்ட கொள்கையில் இருந்து மீண்டும் வர அல்லாஹ்விடம் துவா செய்வோமாக இந்த புனித ரமலான் மாதத்தில் இன்ஷா அல்லாஹ்.

கொள்கை சகோதரன்
அசலம்
பெஹ்ரேன்

Anonymous said...

Assalamu alaikkum,
Masha Allah...May Allah reward you for your intentions.The action taken by the thuckely jamath is un ethical. Because i am thinking that they are lacking in basics of islam. we ask dua to Allah for forgiving the jamath peoples unetical act which is affecting the brother"s islamic activities. Let us pray to Allah for giving more and more strong mind and courage to Br. Ghouse to perform the good things towards islam.
Jahir hussain
bahrain

Asalamsmt said...

Message from: AGM Basha Basha <agmbaasha@yahoo.co.in

அஊதுபில்லாஹ், அஸ்தாஃபிருல்லாஹ், இதுதான் அந்த திருக்குர்ஆன் வாக்கின் உதாரணமோ! (சிலரது இதயம் திறக்க முடியாமல் பூட்டப்பட்டிருக்கும். அது எதையும் பிரித்தரியது. அவர்கள் நரக நெருப்புக்கு இறையாகிடுவர்) என்ற பொருள் கொண்ட திருக்குர்ஆன் வசனத்தை எனக்கு (நம்மவர்க்கு) நினை ஊட்டு ங்கள்.
வலுபெற்ற ஈமானுடன் அல்லாஹ் நமக்கு சுவனத்தை உரிமை யாக்கிட பிராத்திப்போம். அல்லாஹு அக்பர்.
-basha 00971504949593 begin_of_the_skype_highlighting 00971504949593

Anonymous said...

Surah An-Nisa, verses 115… and whoever contradicts and oppose the Messenger (Mohammed (Sal)) after the right path has been shown clearly to him, and follows other than the believers' way We shall keep him in the path he has chosen, and burn him in Hell – what an evil destination.

Dear Br. Ghouse, We are all with you & we raise our voice up for you, be stand on your path firmly. May The Almighty Allah shower his blessing on you & your family..

Brother
Abdul Malik

Anonymous said...

jazakallahu khairan



anpudan
Allahuvin Adimai

Anonymous said...

Dear Ghouse Bhai,

Assalamu Alaikkum (Wara),

I have just seen your replies to APMA (Should be a spoiled UPMA). Alhamdulillah , I am very much proud that we have shared the classes here in Bahrain together.

I was in India last month , during that period I have gone through similar scenerios in our Moosa Appa Dharha in Pettai, but, I could not do anything but to pray to the Almighty. In almost all Dharhas in Tamilnadu this kind of Shirk Activities going on. You have the courage and strong Iman , that you publicly critisesed that, but I think my Iman is not that much stronger , that , I could not able to oppose the shirk activities in Pettai.

Remind me in your Duas that I could able to oppose them and by hence Allah will increase my Thakwa and Iman.

"TOGETHER WE GO FURTHER- Insha Allah".

Wasslam,

M.Mohideen.
Mob: 39944075, mohideen.pitchai@yahoo.co.in

Anonymous said...

அன்புச் சகோதரர் Ghouse அவர்களுக்கு,
உங்கள் ஊர் பீரப்பா பிரியர்களால் உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இது ஒன்றும் புதியது அல்ல.சத்திய நெறியை போதிப்பதர்க்காக இந்த மண்ணில் இறைவனால் அனுப்பப்பட்ட இறை தூதர்கள் அசத்தியவாதிகளால் பல துன்பத்திர்க்கும்,இன்னலுக்கும் ஆளானார்கள்.ஊர் விலக்கம் செய்யப்பட்டார்கள்.அசத்தியத்தை துணிச்சலோடு எதிர்கொண்டார்கள்.உங்கள் ஊரில் இதுவரை யாரும் செய்யாத ஒன்றை மிகவும் துணிச்சலோடு,மார்க்கம் என்ற பெயரில் தக்கலையில் புரையோடியிருக்கும் அனாச்சாரச் சீரழிவுகளை ஒழிவு மறைவு இன்றி பேசி வெளியிட்டதால், காலங்காலமாக நடைபெற்று வரும் சம்பிரதாயங்களுக்கு சாவு மணியடிக்க ஒருவன் வந்துவிட்டான் என்று பீரப்பா பித்தர்களின் வயிற்றைக் கரைத்ததால்தான் இந்த மனித உரிமை மீறலான ஊர் விலக்கு.இதனால் கிஞ்சிற்றும் தளராமல் அசத்தியத்தை சத்தியத்தைக் கொண்டு எதிர்கொள்ளுங்கள்.அல்லாஹ் உங்களின் பாதங்களை ஸ்திரப்படுத்தி,உங்களுக்கு உதவி செய்வான்.உறுதியோடு செயல்படுங்கள்.இந்த ஊர்விலக்கு டகால்டி வேலைக்கெல்லாம் அல்லாஹ்வின் அடியார்கள் பயப்படமாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.இந்த ஞானக்கூத்துகளுக்கெல்லாம் முடிவுகாலம் விரைவில் இல்லை என்பதையும் அறிந்துகொள்வார்கள்.

முகங்குப்புற விழுந்து செல்பவன் தன் லட்சியத்தை அடைவானா?அல்லது நெரான பாதையில் ஒழுங்காகச் செல்பவன் அடைவானா? (67:22)

தேங்கை ப்றியன்,
பஹ்றைன்.

September 30, 2010 12:07 AM

abuarshad said...

As salamu alaikum va rahmathullah...

yaha iriwanin santhi samadanam nam anaivar meedum yanrenrum ninru nilavattumaha..

Islathirku yadiraga islamiya porwaiyil jamathugal cheiginra aniyayam kalam kalamaga wounatha samudayathai thavarana padaiyil vazi nadathuginra koduram islamiyap parvaiyil ivargal sircchaydam cheiyap pada vendiyavargal..!

kanniyathirukum mariyathaikum wouriya immamgal ahnmaiyodu inda samudayathai vazi nadatha vendiyavargal jamathugalin adimaigazagip pona avalam..

sathiyathai maranthu sathiyathai maraithu vegu joraga inda samudayathai naragathai noki vazinadathuginra koduram yanni parkum podu manam vimmi vedikkinrathu...

ya allah! Woullangazai puratak kudiyawanay sathiyam idu than yanru therintha pinpu yangaludaiya wouzzangalai ahsathiyathin pakkam puratti vidathay..

ahsathiyathil ariyamal irukkinra makkazuku nervazi kattuwayaha.! Adarku yangazaiyum oru karuviyaha akkuwayaha..! Yangaludaiya pathangazai wourudi paduthuwayaha...! Aameen.

Anonymous said...

தக்கலை APMA ஜமாஅத் மக்களுக்கு... அஸ்ஸலாமு அலைக்கும்

நான் " தக்கலைக்காரன் " என ஒரு சில சகோதரர்கள் குறிப்பாக Tky அசீஸ் , சாகிர் அலி, முஹமத் பஷீர் , அப்துல் வாஹித் என பலரும் " தக்கலைக்காரன் " என்று தங்கள் பெருமைகளை மிக அழகான சொல்லாடல்களை திறம்பட கையாண்டு நமது முஸ்லிம் மக்கள் பலரும் மெச்சிக்கொள்ளும் வகையில் அவ்வப்போது பல நல்ல கருத்துக்ககளை அள்ளி வீசியிருந்திருக்கிரார்கள் என்பதை இதுவரை வந்த மின்னஞ்சல்கள் வாயிலாக நாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம். தக்கலையை சாராத ஒரு சிலர் இவர்களின் செயல்களை கண்டித்த போது அவர்களையும் சரமாரியாக வசை பாடி தண்டித்து விட்டதாகவும் மெச்சிக்கொண்டார்கள் இப்போது மீண்டும் மீண்டும் அதே நல்ல முறையில் தொடர்ந்து நிரூபிக்கவும் செய்கிறார்களே .... படித்த தக்கலைசகோதரர்களே... நீங்கள் இன்னுமா உறக்கம் !... எங்கே உங்களது தன்மானம் ! " தக்கலைக்காரன் " என்றால் இப்படித்தான் இருப்பார்களோ ! என மக்கள் பலரும் நினைக்க அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்து சந்தோஷமடைய தக்கலைக்காரர்களால் முடிகிறதா !... என்னே விந்தை ! அது என்ன..! இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ரவ்டித்தனம் பண்ணிக் கொண்டேயிருக்க முடியும் !

ஆமா " நான் தக்கலைக்காரன் " என்று பெருமையாகவோ அல்லது ஸ்பெஷலாகவோ ? ஊர் பூரா சொல்லிக்கொண்டு நடப்பதற்கு அப்படி என்னதான் தக்கலைக்கு வீர பாரம்பரியம் இருக்கிறது ? தக்கலை சகோதரர்கள் மற்றவர்களுக்கு தெரிவித்தால் நல்ல இருக்குமே !... ஒருவேளை பீரப்பா தர்ஹாவை வைத்துதான் இத்தனை ஆட்டமோ !... பீரப்பாவுக்காக தான் APMA ஜமாஅத். APMA ஜமாஅத்துக்காகத்தான் பீரப்பா என பிரிக்க முடியாத நிலைகளில் இரண்டறக் கலந்து மக்கள் ஆகி விட்டார்கள். APMA ஊர் நிர்வாகிகளுக்கு தர்காவையும் அதன் நிர்வாகத்தையும் விட்டால் வேறு எந்த ஒரு உருப்படியான வேலையும் ( கத்னா, கல்யாணம், நன்கொடை, ஊர் நீக்கம் ) கிடையாது. ஊருக்கு நன்மை செய்யம் எந்த காரியங்களிலும் ஈடுபட்டது கிடையாது. படித்தவர்கள் நிறைந்த தக்கலை என்று சொல்லிக் கொள்ளும் இந்த தக்கலைக் காரர்கள் இப்படி தர்ஹா மோகத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள் என சவூதி அரேபியாவில் இருக்கும் என்னுடைய தக்கலைக்கார நண்பன் ஒருவன் ஆதங்கத்துடன் சொன்னார். அத்தோடு சிந்திக்க தூண்டும் சகோதரன் கவுஸ் முகம்மது அவர்களுடைய இந்த BLOG ல் உள்ள வீடியோக்களை பார்த்து தக்கலை மக்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளவும் முடிகிறது உண்மையும் இதுதானோ ! மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட தக்கலைக்காரர்கள் மக்களுக்கு தெரியப் படுத்துங்கள். நாம் இஸ்லாத்தை அறிந்தவரையில் இஸ்லாத்திற்கு நேர் எதிரான தர்ஹா , சமாதி வழிபாடு , திருவிழா கொண்டாட்டங்கள் எல்லாம் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் வாழும் ஒரு ஊருக்கு சிறப்பையா தேடித்தரும் ! இவைகள் தான் தக்கலைக்காரன் என்கிற சிறப்பை ( மமதையை) தருகிறதா ! அல்லது இதைத்தவிர வேறு ஏதாவது சிறப்புகள் உள்ளதா !.. மின்னஞ்சல்கள் கிடைத்த மக்கள் அனைவருக்கும் உண்மைகளை தெரியப்படுத்தினால் தக்கலையில் உள்ள " தக்கலைக்காரன் " மதிப்பு கூடுமே !

தர்ஹாவால்தான் " தக்கலைக்காரன் " இந்த கூப்பாடு போடுவதாக இருந்தால் ! இஸ்லாத்திற்கு எதிரான நரகத்தில் தள்ளக் கூடிய தர்ஹா மாயையிலிருந்து விடுபட்டு வெளியில் வந்து குப்று (KUFRU ) எனும் கறுப்பு கண்ணாடியையும் கழட்டி தூர வீசி எறிந்து விட்டு உண்மையான இஸ்லாமிய மார்கத்தை திறந்த மனதுடன் கண்டு படித்து வாழ்க்கையை நலமுடன் வாழ இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வாருங்கள் தக்கலைசகோதரர்களே !...................

Anonymous said...

இதற்கு முன்னர் பதிவு செய்ததின் தொடர்ச்சி .......

அண்ணாந்து எச்சில் உமிழ்வது தன் முகத்திலேதான் விழுந்து நாற்றமடிக்கும் என நன்றாக அறிந்திருந்தும் ஒருவித மமதையில் ( தக்கலைக்காரன் என்ற மமதையோ! ) ஒவ்வொரு தனிமனிதன் மீதும் துவேஷத்தை அல்லாஹ்வுக்கு பயமில்லாமல் எவ்வித சங்கோஜமும் இல்லாமல் சரமாரியாககொட்டுகிற உங்கள் ஜமாஅத்தை சார்ந்த இந்த " நான் தக்கலைக்காரன் " (முஸ்லிம் என்று தங்களை சொல்லிக் கொள்ளும்) என்கிற இந்த அழகிய பண்பாளர்களை தனிப்பட்ட முறையிலாவது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உபதேசிக்க படித்த தக்கலை சகோதரர்களே உங்கள் யாருக்குமே மனம் வரவில்லையா !.... அல்லது அப்படியெல்லாம் இல்லவே இல்லை இந்த பண்பாளர்கள் செய்வது சரிதான் , தவ்ஹீது பற்றி பேசுபவர்கள் யாராக இருந்தாலும் இப்படிப்பட்ட பண்பான அழகான அவதூறு பதிலடி தேவைதான், அப்பத்தான் வாய் மூடி ஒதுங்கி விடுவார்கள் என நினைத்து விட்டீர்களா ...... எப்படியாயினும் அதே " தக்கலைக்காரன் " ஆகிய நீங்களும் இவர்களின் துவேஷ, அவதூறு அருமை பெருமையில் பங்கு கொள்வதாக இருந்தால் உங்கள் தக்கலையை சார்ந்த அதே " தக்கலைக்காரன் " சிந்திக்க தூண்டும் சகோதரன் கவுஸ் முகமது குறிப்பிட்டிருக்கும் அடாவடித்தனம் தக்கலைக்காரங்களுக்கு சொந்தமாகி மீண்டும் மீண்டும் நிரூபணமாகி கொண்டேயிருக்குமே....................... பரவாயில்லையா ! ... பக்கத்து ஜமாத்துக்கள் ( குமரி மாவட்டத்தில் ) எல்லாம் சமுதாய நிலைமைகளை தெளிவாக உணர்ந்து ஒற்றுமையை கருத்தில் கொண்டு ஜமாஅத் நடவடிக்கைகளை சரி செய்து கொண்டிருக்கும் வேளையில் தக்கலை APMA ஜமாஅத் மட்டும் விடாப்பிடியாக அநியாயத்திற்கு துணை போகிறார்களே .... இவர்களுக்கு மட்டும் என்ன தனித்துவம் !...... தக்கலைக் காரன் என்பதலா ! ....................

நல்ல உள்ளம், சிந்தனை , இறை அச்சம் கொண்ட கொண்ட பல தக்கலைக்காரர்களும் ஒருவேளை இந்த " தக்கலைக்காரன் "என்கிற இந்த அழகிய பண்பாட்டாளர்கள் நம்மையும் ஒரு பிடி பிடித்து விடுவார்கள்... இவர்களிடம் யார் பேசுவார்கள் என இவர்களின் மவ்சு, பவுசு , தெரிந்தே ஒதுங்கி விட்டீர்களோ...... ! சரி எது எப்படி இருந்தாலும் சுத்தம் செய்யாதவரை துர்நாற்றம் வீசிக் கொண்டேயிருக்கும் என்பதில் ஐயமில்லைதானே !

எடுங்கள் துடைப்பத்தை. ............
கூட்டுங்கள் குப்பைகளை....... ....( தர்ஹாக்களில் அல்ல APMA ஜமாஅத் போன்ற ஒவ்வொரு ஜமாத்திலும் )
ஒதுக்குங்கள் ஓரமாய்
கொட்டுங்கள் தொட்டியிலே
சொல்லுங்கள் " நான் இஸ்லாமியன் "
ஒன்று படுங்கள் முஸ்லிம்களாய்
மறுமையில் வெற்றி காண தயாராகுங்கள் ........ எதிர்கொள்வோம்............அல்லாஹ்வின் கயிற்றை பலமாக இறுகப் பற்றிப்பிடித்து

வஸ்ஸலாம்
தக்கலையை அடுத்துள்ள ஊர்க்காரனாகிய ஒரு இஸ்லாமிய ஊழியன்
அபூ அப்து இப்னு முஹம்மது

Note ; நான் யார் என்று மண்டையை போட்டு உடைக்காமல், துவேஷம் கொள்ளாமல், முடியுமானால் ( சவாலாக சொல்லவில்லை ) , முறையாக தக்கலைக்கார சகோதரர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் அப்படியில்லையெனில் ( நல்லெண்ணம் கொண்ட சகோதரர்கள் மவ்னமானால் ) இருக்கவே இருக்கிறார்கள் " தக்கலைக்காரன் " என்கிற இந்த பண்பாட்டாளர்கள் மீண்டும் பல வழிகளிலும் நாங்கள் " தக்கலைக்காரன் " என்பதை நிரூபிப்பதாக இருந்தாலும் ஆட்சேபனை இல்லை காரணம் மீண்டும் நிரூபணம் தானே ஆகப்போகிறது ! ...

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்

தக்கலை நண்பர்களின் மெயில்களை பார்க்கும் போது குறிப்பாக சகோதரர் கவுஸ் முஹம்மத் அவர்களின் தொடர் போராட்டங்கள் கருத்துக்கள் , இந்த Blog ல் பதிவாகியுள்ள பல ஜமாஅத் சகோதரர்களின் கருத்துக்கள் இவற்றையெல்லாம் படிக்கும் போது தக்கலை ஊரில் நிர்வாகம் இருந்தும் இல்லாதது போன்ற தோற்றமே ஏற்படுகிறது. ஊருக்கு தலைமை ஏற்பது என்பது மிகப் பெரிய பொறுப்பு , அப்படிப்பட்ட பொறுப்பை தற்போதைய தக்கலை APMA ஜமாஅத் நிர்வாகத் தலைவர் ஏற்றிருக்கிறாரா?... எவை, எவை எல்லாம் சிறந்தத் தலைமைப் பண்புகள் என்பதற்கு மேலாண்மை ஆய்வாளர்கள் பின்வரும் பண்பியல் கூறுகள் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.


தன்னடக்கம், சுய கட்டுப்பாடு (self control)
எல்லா மக்களையும் சமமாக மதிக்கும் சமநிலையான உணர்வு,
ஒரு காரியத்தில் முடிவெடுப்பதில் , பாரபட்சயமில்லாத தீட்சண்யமான பார்வை,
சரியாக திட்டமிடல் அந்த திட்டத்தை மிகத்துல்லியமாக நிறைவேற்றுதல்,
ஊர் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருத்தல்,
ஒருவர் மீது பட்சாதாபப்படுதல்,
அனுதாபப்படுவதோடு, அனுதாபத்திற்கு உரியோரின் உள்ளத்தில் உயர்வான எண்ணக்கிளர்ச்சியை (Empathy) உருவாக்குதல்
விருப்பு வெறுப்புகள் இல்லாமல் மக்கள் எல்லோரிடத்திலும் இணைந்து போதல்,
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கையாளர்களிடம் ஒரு இணைவை (integragity) உருவாக்குதல்
ஆகியவைகள் தலைமைப் பண்பாக இன்று பேசப்படுகிறது. இப்படிப்பட்ட பண்புகள் கொண்டவரை தலைவராக ஒவ்வொரு ஜமாஅத் ஊர் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஊருக்கு தலைமை ஏற்பது என்பது மிகப் பெரிய பொறுப்பு , அப்படிப்பட்ட பொறுப்பை தற்போதைய தக்கலை APMA ஜமாஅத் நிர்வாகத் தலைவர் ஏற்றிருக்கிறாரா?... அப்படி ஏற்றிருந்தால் ஜமாஅத் சகோதரர்கள் பலருக்கும் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்க வாய்ப்பேயில்லை தக்கலை APMA ஜமாஅத் சகோதரர்கள் இந்த நிர்வாகத்தை மாற்றுவதற்குரிய மறு பரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது

அஸ்ஸலாமு அலைக்கும்
புதுகோட்டை கமால்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

கட்ட பஞ்சாயத்து நடத்தும் தக்கலை அபீமுஅ ஜமாஅத் நிர்வாகத்தை உடனடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய சிறப்புத் தீர்மான எண் 10/2008, 26.08.2008இன் படி முத்தவல்லிகள் சமூகப் புறக் கணிப்பு, மற்றும் ஊர்விலக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடக் கூடாது என்கிற உத்தரவைமீறி ஊர்விலக்கங்கள் , தற்காலிக உறுப்பினர் உரிமை இழப்பு , என தொடர்ந்து நடை பெறுகிறது என்பதனை தக்கலை சகோதரர் கவுஸ் முகம்மத் அவர்களின் சமீபத்திய செய்திகளால் நாம் அறிகிறோம் . இது போன்று உத்தரவைமீறி ஊர்விலக்கம் செய்யப்பட்டுள்ள வாதி ஒருவர் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திடம் கொடுத்த மனுவைப் பரிசீலித்து ஊர்விலக்கத்தை ரத்துசெய்து வாதியை மீண்டும் ஜமாத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகவும் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் 10.11.2008இல் அபீமுஅவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தி வக்ஃப் வாரியம் 6.3.2009இல் இன்னொரு கடிதமும் அனுப்பியுள்ளது. இதன்பின்னரும்கூட அபீமுஅ ஜமாத் தன்நிலை பற்றி அஞ்சவில்லை. தீராப்பழிக்கு ஆளாக நேரிடுமே என்று கவலை கொள்ளவுமில்லை. தன் கடிதங்களுக்கு ஏற்ப அபீமுஅ செயல்படாததால் பிரதிவாதிகள் ஜமாத்திற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று காரணம் கேட்டு 18.9.2009 அன்று வக்ஃப் வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கான தக்க விளக்கங்களைக் கடைசிவரை ஜமாத் அளிக்கவில்லை.

தக்கலை அபீமுஅ ஜமாஅத் அரசாங்க வக்ஃப் வாரியத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பு, ஆனால் அரசாங்க வக்ஃப் வாரியத்தின் ஆணைகளை அலட்சியப்படுத்தி , அப்பட்டமாக, புறந்தள்ளியிருப்பதோடு , தான்தோன்றித்தனமாக, கட்ட பஞ்சாயத்து ஸ்டைலில் ஊர் நிர்வாகத்தை நடத்துவதாகவே தெரிகிறது. இப்படி அநியாயமாக செயல்பட்டுவரும் தக்கலை அபீமுஅ ஜமாஅத் நிர்வாகத்தை இஸ்லாமிய சமூக மக்கள் நலன் கருதி வக்ஃப் வாரியம் உடனடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்.

வஸ்ஸலாம்

சையத் அலி

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டும் ரசூல் (ஸல்) அவர்களின் சுன்னாக்களின் மூலமும் வழிகாட்டுவதுதான் தலைமைக்குரிய அடிப்படைப் பண்பாகும் என்பதை ஒவ்வொரு முஸ்லிம்களும் புரிந்து கொள்ளவேண்டும். ஜமாத்தை நிர்வகிக்க தகுதியில்லா தலைவர்களால் தலைமையில் கோளாறுகள் ஏற்படுகிறது அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைதான் தற்போது தக்கலை அபீமுஅ ஜமாஅத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது என பல சம்பவங்கள் மூலம் தெரிய வருகிறது. எப்படிப்பட்ட தலைமைப் பண்புகள் ஒரு தலைவருக்கு கண்டிப்பாக
இருத்தல் அவசியமானது என்பதை கீழ்காணும் விளக்கங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்

1. தலைமைக்குரிய முதல் இலக்கணம் தாம் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவுக்கும் அல்லாஹ்வுடைய கட்டளைகளை - வழிகாட்டுதலை - ஆதாரமாகக் காட்டக்கூடியவர்களாக இருந்திட வேண்டும். அந்த முடிவுகள் - வணக்க வழிபாடுகள் குறித்து இருந்தாலும் சரி, முஸ்லிம்களின் சமூக, பொருளாதார அல்லது அரசியல் பிரச்னையாக இருந்தாலும் சரியே!

2. தலைமைக்குரிய அடுத்த இலக்கணம் தக்வா என்னம் 'இறையச்சம் . இது தலைமைக்கு மிக மிக அவசியம்.

3. தமது பொறுப்பு குறித்து இறைவன் விசாரணை செய்திடுவான் என்ற அச்சம் ஒவ்வொரு தலைரிடத்தும் காணப்படிவேண்டிய அரும்பண்பாகும். ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மக்களைக் கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்'. புகாரி, முஸ்லிம்

4. தலைமைக்குரிய அடுத்த பண்பு 'இல்ம்' என்ப்படும் 'இஸ்லாமிய அறிவு'.'அறிவு' (இல்ம்) என வருகிறபோது தலைவராக இருக்கின்றவர் வெறும் இஸ்லாமிய அறிவைப் பெற்றவராக இருந்தால் மட்டும் போதாது. தம்மைச் சுற்றி வாழும் ஜாஹிலிய்யாவைப் பற்றியும் அவர் முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

5. ஹலாலானவற்றை நிலைநிறுத்த வேண்டும். ஹராமானவற்றை தலைகாட்ட விடாமல் தடுக்கவேண்டும்.

6. எல்லா நிலைகளிலேயும், எல்லாப் பிரச்னைகளிலும் குடிமக்கள் அனைவரும் நியாயம் மிக எளிதாகக் கிடைக்கும் வண்ணம் நீதி பரிபாலனத்தை நிலைநிறுத்த வேண்டும். இதில் அவரே மார்க்க அறிஞராகவும் நீதி வழங்கிட வல்லவராகவும் இருந்திட வேண்டும்.

7. பைத்துல் மாலில் மிகவும் கவனமுடனிருக்க வேண்டும். ஜகாத்தையும், தொழுகையையம் ஒன்றுபோலவே நிலைநாட்ட வேண்டும்.

8. இஸ்லாமிய சமுதாயத்தின் ஒற்றுமையை எல்லா நிலைகளிலேயும் கட்டிக்காக்கும் அளவில் தன் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

9. தலைமை பொதுமக்களின் நலன் நாடக்கூடியதாக அமைந்திட வேண்டும். பொதுமக்களை மோசடி செய்திடக்கூடாது. பொதுமக்களைத் தங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அடிமைகள் என்று கருதிடக்கூடாது. பொதுமக்ககள் தங்களை விமர்சிப்பதைத் தடை செய்தல் கூடவே கூடாது. இதையே கலீஃபா உமர் (ரலி) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்: 'இஸ்லாமிய அறிவை மட்டுமே பெற்றிருந்து, ஜாஹிலிய்யாவை அறியாத ஒருவன் இஸ்லாத்தையே அலைக்கழித்து விடுவானோ என நான் அஞ்சுகின்றேன்.'

இஸ்லாமிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தகுதிமிக்க தலைவர்களையும் நாம் பெற்றே வந்திருக்கின்றோம். தகுதியில்லாத தலைவர்களும் நம்மை ஆட்டிப்படைத்திருக்கின்றார்கள் என்பதும் புரியும்.நமக்குத் தலைமை தாங்கிடும் இஸ்லாமியத் தலைவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை நாம் துல்லியமாக அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.தொழுகையும், ஜகாத்தும் நமக்கு எவ்வாறு அடிப்படைக் கடமைகளோ அதுபோல 'தக்வா'வுள்ள தலைமையைத் தேர்ந்தெடுப்பதும் ஒரு மிக முக்கியமான கடமையே!

தக்கலை அபீமுஅ ஜமாஅத்தின் தற்போதைய தலைவர் ஜனாப் P .M Abdul Ghafoor அவர்களுக்கு மேற்காணப்படும் தகுதிகள் உள்ளதா ? இல்லையெனில் தகுதிக்குரியவரையே ஜமாஅத் மக்கள் தேர்ந்தெடுப்பது சமுதாயக் கடமை மட்டுமல்லாமல், இஸ்லாமிய கடமையும் ஆகும். இந்த கருத்துக்களை இங்கே எடுத்து எழுதியதற்காக தற்போதைய தலைவரோ அல்லது அவரது உறவினர்களோ கோபம் அடையாமல் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கும் கருத்துக்ககளை திறந்த மனங்களுடன் அலசிப் பார்த்து, புரிந்து நல்ல தலைமையை தேர்ந்தெடுத்து மக்களை அரவணைத்து செல்லக் கூடிய அபீமுஅ ஜமாஅத்தை வழி நடத்திட வகை செய்ய வேண்டும்.

வஸ்ஸலாம்
தக்கலை அபீமுஅ ஜமாஅத் உறுப்பினர் - என் சுய விபரம் வெளியிடமுடியாததற்கு நமது அபீமுஅ ஜமாஅத் சட்டங்களும் அதனை ஊர் கட்டுப்பாடு என்கிற முறையில் செயல் படுத்தும் நிர்வாகிகளுமே காரணம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் போல் அபீமுஅ ஜமாத்தை சார்ந்த பல உறுப்பினர்களும் குடும்பத்தை , நண்பர்களை , உறவினர்களை , பகைக்க வேண்டிய சூழ்நிலைகளுக்கு இந்த ஜமாஅத் நிர்வாகம் தள்ளி விட்டுவிடுவார்கள் என ஒதுங்கி தனக்குள்ளாகவே முணுமுணுத்து மற்ற ஜமாத்துக்களைப் போல நல்லதொரு மாற்றத்தை எதிர் நோக்கி இருக்கிறார்கள்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாமிய சமுதாய விரோத செயல்களை பல சகோதரர்களும் தெரிவித்திருப்பது போல எவ்வித தயக்கமும் இல்லாமல் , வக்பு வாரியத்தையும் மதிக்காமல் தக்கலை அபீமுஅ ஜமாஅத் செயல் பட்டு வருவது மிகவும் கண்டனத்திற்குரியது மட்டுமல்லாமல். ஊர் கட்டுப்பாடு என்கிற பெயரில் சகட்டு மேனிக்கு எடுக்கப்படும் இந்த மோசமான நடவடிக்கைகளால் சமுதாயப் பிளவுதான் ஏற்படுமே தவிர ஒற்றுமை ஏற்பட வழியேயில்லை

முஹமது இப்ராகிம்
மணக்காடு

Mohamed Subuhan Sultan said...

From: mohdsubuhan@gmail.com
Date: Thu, 22 Sep 2011 10:30:50 +0300
Subject: Re: அடாவடித்தனம் ?! தொடருகிறது ஆதாரங்களுடன் நிரூபணம் - தக்கலை APMA நிர்வாகத்தின் சீரழிவு
To: haiderghouse@hotmail.com
CC: abuanaar@gmail.com; hassaj60@hotmail.com; hassaj60@gmail.com; mohammedrafi@etaascon.com; mohamedthaj@yahoo.com; thajmuneer@gmail.com; sakirali_123@yahoo.com; shawahid1961@gmail.com; shawahid@yahoo.com;

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர்களே,
மிகச்சிறந்த ஆக்கம் தந்த சகோதரர் Ghouse அவர்களுக்கு - Jazakkallah khair !
சரியான நேரத்தில் பதிந்த நேர்மையான பதிவு!
எந்த ஜமாஅத் ஆக இருந்தாலும் தவறு செய்பவர்களை கொடுமைபடுத்தும் எண்ணத்துடன் தண்டனை வழங்காமல், அவர்களின் நியாங்களையும் விசாரித்து, தவறு உண்மையிலேயே செய்திருந்தால் அதை உணர்த்தி திருத்தும் பொருட்டு நடவடிக்கைகள் அமையவேண்டும்! அதைவிட்டுவிட்டு, அதிகார கௌரவத்தில் சமுதாயத்தை பயமுறுத்தி கட்டுப்படுத்த முயன்றால் தலைகுனிவையே நேரிடவேண்டிவரும். எல்லா ஜமாஅதிற்க்கும் இது ஒரு படிப்பினையே! மேலும், ஒரு ஜமாத்திற்கு எதிராக கிடைக்கபெற்ற இந்த நியாயமான தீர்ப்பு, இஸ்லாத்திற்கு எதிராக கவிதை மற்றும் கருத்துக்கள் (பேச்சுரிமை என்ற போலிப்பெயரில்) பதியும் நபர்களுக்கு ஊன்று கோலாய் அமைந்துவிடக்கூடாது. எனவே, இஸ்லாத்திற்கும் அதன் அடிப்படை கொள்கைகளுக்கும் எதிராக யார் எழுதினாலும், சொன்னாலும், அவர்கள் கண்டிக்கபடவேண்டியவர்களே! அவர்கள் குடும்பத்தார்கள் அல்ல! அப்படி அறியாமையால் யாராவது பேசினாலோ, எழுதினாலோ, அவர்களை "KAFIR " என்ற முத்திரை குத்தி குடும்பத்தோடு ஊர்விலக்கம் செய்வதில் என்ன பயன் உள்ளது??? ஒரு முஸ்லிமை எந்த ஒரு காரணத்தாலும் இன்னொரு முஸ்லிம் "KAFIR " என்று சொல்ல மார்க்கத்தில் இடமில்லை. அறியாமையால், இதுதான் இஸ்லாம், இதுதான் நம் முன்னோர்கள் காட்டித்தந்தது என்ற நம்பிக்கையில் செவ்பவர் எல்லாவரும்கூட நம் சக முஸ்லிம்களே, "லயிலாஹா இல்லல்லாஹு முஹம்மத்தூர் ரசூல்லுல்லாஹி" என்ற கோட்பாடினை கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை "KAFIR " என்று சொல்லும் தவறை செய்யாமல் இருப்போமாக! கருத்துசுதந்திரம் என்ற மாயலோகத்தில் இருக்கும் சகோதர்கள் இஸ்லாத்திற்கு எதிராக என்னவேண்டுமானாலும் எழுதலாம் என்று எண்ணுவதை விட்டுவிட்டு இஸ்லாம் காட்டித்தரும் உண்மைகளை உணர்ந்து நடப்பதே உத்தமம்! கருத்துவேறுபாடுகள் பல இருக்கலாம், அவற்றை நல்ல முறையில் பகிர்ந்து ஆராயலாம், அதைவிட்டுவிட்டு பகைமை பாராட்டுவதில் என்ன அர்த்தமுள்ளது?! இந்த பகைமையே வளர்க்கும் வேலையே ஜமாஅத்களே முன்னின்று நடத்துவதுதான் வேதனை! எனவே, இந்த நீதிமன்ற தீர்ப்பிலிருந்து எல்லா ஜமாஅத் களும், குறிப்பாக நான் முன்னர் சார்ந்திருந்த APMA ஜாமத்தும் பாடம் பயிலும் என்றே எண்ணுகிறேன்! இனிமேலும் ஊர்விலக்கம் எண்ணும் வன்கொடுமை நடந்தேறாமல் இருக்கட்டும்!

அல்லாஹ்வே எல்லாம் அறியப்போதுமானவன்!
வஸ்ஸலாம்...



Mohamed Subuhan Sultan

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புடன் தக்கலை சகோதரர்களுக்கு

இதுவரை கஷ்டப்பட்டது போதும் சகோ. சகோதரிகளே! ஊர் விலக்கம், தள்ளி வைத்தல், இப்படி பல விலக்கம்களை பார்த்து, பார்த்து மனம் முசிந்து இருக்கும் தக்கலை ஜமாத் சகோதரர்களே தைரியமாக உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள். அடுத்து வக்ஃப் வாரியம் உடனே நடவடிக்கை எடுக்க ஆக்கமான காரியம்களை சகோ. கவுஸ் முஹம்மது, மற்றும் சகோதரர்கள் முயற்ச்சி செய்யனும். இதுவரை எவ்வளவு குடும்பத்தை ஊர் விலக்கம் என்று சொல்லி நாசம் பண்ணி இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை, கோர்ட் நடவடிக்கை எடுத்தால் தான் இந்த தறி கெட்டதனமாக நடக்கும் ஜமாத் தலைவர்களுக்கு முடிவு கட்டனும். இன்ஷா அல்லாஹ்.

Anonymous said...

Hi
May the allmigty’s peace be upon all true belivers.
There will be a certain rules and regulations for every organization. A jama’th surely having some rules n regulation. If you are admitting and accepting the rules there won’t be any problem. But you a group of brothers violating the rules and complaining the organization.
They can provide the forms for yours or your son/ daughters marriage. But the nikkah must be performed by the kazhi (musliar) or by the permission of the kazhi any other can perform. But you guys never like our musliar to perform the nikkah. Then how can the jama’th accept your request. ‘ oorukku oru nyayam ungalukku oru njyaayama??’ jamath will never stop any individuals to attend the marriage. But no individual who is living with the jama’th will attend your marriages. Also the graveyard is common to all the jama’th members. But janasa salah, burrial should be as per the jama’th requirements. There will be a dua ( thalkeen ) after the burial. But you peoples never allow this. Then how the jama’th can allow to bury?
Just think about your company. Any persons those who work away from your company rules, can your manager allow him to work inside the office?? Nooo. Never be….
A small suggestion also to you. Why don’t you group of people can make an organization (jamath) and follow your rules. Why are you disturbing other? Let them live as it is. You can follow your rules with your organization. But the nafs of you guys will not allow this. You people always needs to fight with jama'th. Take care. And fear allah. Try to find the true path. You ask me to sent my suggestions. That’s why I wrote something here. Its purely my thoughts. I don’t need any reply. May almighty shows as the right way to achieve right path.. aameen.

Abu Mohammed

Ghouse Mohamed - Thuckalay said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஒரு ஜமாஅத், அதன் நிர்வாகம், சட்ட திட்டங்கள் , அதனை பிரயோகிக்கும் முறை , நிர்வாகத் தலைவருக்குரிய தகுதி அவர் எப்படி செயல்பட
வேண்டும் போன்ற தெளிவான கருத்துக்கள் இந்த மக்கள் மன்றத்திலே பதிவு செய்யப்பட்டுள்ளது அபூ முஹம்மது அவர்கள் ஒரு முறை ஊர் ஊர் என்று ஆதங்கப்படாமல் படித்து, சிந்தித்து புரிந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.. இனி

திருமணம் நடத்துவதற்குரிய சட்டம் பற்றி அறியாமையில் கருத்து எழுதியிருக்கிறீர்கள் . அன்பு சகோதரரே இதோ இந்த லிங்க் ஐ
http://saynotodowry.blogspot.com/p/blog-page.html க்ளிக் செய்து அறிந்து கொள்ளுவதோடு தவறான எண்ணத்தையும் மாற்றி கொண்டால் ஊரும், ஊர் மக்களும் இஸ்லாமிய வழியில் முன்னேற வாய்ப்புள்ளது . ஆனால் அபீமுஅ ஜமாஅத் நிர்வாகம் முதலில் கேட்பது என்ன தெரியுமா ? எந்த முறைப்படி திருமணம் செய்ய போகிறீர்கள் ? சுன்னத் ஜமாஅத் முறைப்படி என்றால் மட்டுமே FORM தரமுடியும் என கறாராக சொல்லி அனுமதி மறுக்கப்படுகிறது. பின்னர் என்ன ? சம்மந்தப்பட்டவருக்கு ஊர் விலக்கம்தான் இதுதான் வாடிக்கையாக இன்னும் நடக்கிற அடாவடி அநியாயமான செயல். மேலும் ஊர் விலக்கம் செய்யப்பட்டவர் ஜமாத்தில் நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்ளக் கூடாது மீறி கலந்து கொண்டால் நிர்வாகிகள் , ஆலிம் போன்றவர்கள் திருமணத்தை நடத்த முடியாது என பகிரங்கமாகவே அரை கூவல் விடுப்பார்கள் இதுவும் இன்று வரை அபீமுஅ ஜமாஅத்தில் நடந்து கொண்டிருக்கிற அடாவடித்தனம் தானே. சமீபத்தில் என் மகன் கலந்து கொள்ளக் கூடாது என அபீமுஅ ஜமாஅத் தற்போதைய நிர்வாகசெயலாளர் ஜனாப் சிராஜுதீன் அவர்கள் என் சகோதரியின் கணவரிடம் கண்டிஷன் போட்டாரே... இதுதான் ஜமாஅத் நிர்வாகத்தின் லட்சணமா ? ஜனாப் சிராஜுதீன் அல்லாஹ்வுக்கு பயப்படக் கூடியவராக இருந்தால் உண்மையை உலகுக்கு சொல்ல வேண்டும் ? சொல்லுவாரா ? நீங்கள் தக்கலை சார்ந்தவர் இல்லை என்பது உங்கள் அறியாமையில் இருந்து அறிய முடிகிறது. எப்படியிருந்தாலும் இவ்வளவு தூரம் ஊர், ஊர் என கவலைப்படுகிறீர்களே .. ஏன் நீங்களே அவரை தொடர்பு கொண்டு விசாரித்து அறிந்து உண்மையை இந்த மக்கள் மன்றத்தில் தெரிவிக்கலாமே செய்வீர்களா ?



இனி அடுத்த விஷயம் , தல்கீன் : உயிருடன் உள்ளவனுக்கு ஓதிக் காட்டி போதனை செய்யக் கடமைப்பட்டவர்கள் அப்படி செய்யாமல் உயிரற்ற சிந்திக்க திரனற்ற எழுந்து நடக்க சக்தியற்ற மையத்துக்கு முன்னால் இந்த வசனத்தை (குர் ஆனை) ஓதிக் காட்டுகிறார்கள். கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா? இதுதான் நபி வழியா? கூடுதல் விபரத்திற்கு http://www.islamkalvi.com/portal/?p=5152என்ற இந்த லிங்க் ஐ

க்ளிக் செய்து அறிந்து கொள்ளுவதோடு தவறான எண்ணத்தையும் மாற்றி கொண்டால் ஊரும், ஊர் மக்களும் இஸ்லாமிய வழியில் முன்னேற வாய்ப்புள்ளது.



அடுத்து உங்களின் அடுத்த ஒற்றுமைக்கான (?!) சிறந்த கருத்து (?!) : நீங்கள் எக்கேடு கெட்டாவது போங்கள், நாங்கள் திருந்தவே மாட்டோம் , இப்படிப்பட்ட அடாவடித்தனமான, ரவ்டிசமான , அநியாயமான , இஸ்லாத்திற்கு எதிரான செயல்களை இனியும் நல்ல முறையில் செய்யத்தான் செய்வோம் . வேண்டுமானால் எங்களோடு சேர்ந்து வாழுங்கள் இல்லையெனில் தனி ஜமாஅத்து உருவாக்கி பிரிந்து போக வேண்டியதுதானே, எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என அழகான , இஸ்லாமிய சிந்தனையுடன் , ஒற்றுமைக்கான அற்புதமான கருத்தை விளாசித் தள்ளியிருக்கிறீர்கள். உங்கள் மீது எனக்கு பரிதாபமே ஏற்படுகிறது.



இனி உங்களின் அற்புதமான யோசனைகளை (?!) பற்றி இங்கே இந்த மக்கள் மன்றத்தில் மக்கள் கருத்து சொல்லுவார்கள் என எதிர்பார்க்கிறேன்

வஸ்ஸலாம்
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் ............
தக்கலை கவுஸ் முஹம்மது - பஹ்ரைன்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும், தவ்ஹீத் என்று சொன்னாலே தக்கலை
ஜமாஅத் விரோதியாகத்தான் பார்கிறார்கள். தவ்ஹீதை பின்பற்றுபவர்கள் தக்கலை ஜமாத்தில் உறுப்பினர்களாக இருக்க முடியுமா?
ஜமாஅத் நிர்வாகிகள் இதற்கு பதில் சொல்வார்களா?

தக்கலை நண்பன்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்


தக்கலை அபீமுஅ ஜமாஅத் உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணம் தர்ஹா சம்மந்தமான குப்ரான காரியங்களுக்காக பயன்படுத்த படுகிறதா? அப்படி என்றால் இவற்றை பாவம் என்று கருதும் மக்கள் எப்படி வரிப்பணம் செலுத்துவார்கள்?. இது தற்போது ஏற்பட்டுள்ள ஒரு முக்கியமான பிரச்சினை இதற்கு ஒரு தீர்வு காண்பது மிகவும் உசிதமானது. ஒரு உறுப்பினருக்கு எவ்வளவு வரி என்பது பெரும்பாலான மக்களுக்கு இன்றுவரை தெரியாது என்பதே ஜமாஅத் மக்கள் பலரிடமும் கேட்டறிந்த உண்மை. மேலும் யாருக்கு எவ்வளவு வரி பாக்கி என்பது கல்யாணம் , அல்லது கத்னா என்று வந்தால் மட்டுமே தெரிய வரும் அதுவும் ஜமாஅத் சொல்கிறபடி திருமணம் நடத்த இசைந்தால் மட்டுமே அதற்குரிய FORM தரப்பட்டு அவர்கள் கேட்கிற பணத்தை வசூலிக்கப்படும். கேட்கப்படும் பணம் என்ன கணக்கில், என்ன முறைப்படி என்று உறுப்பினர்களுக்கு முறையாக சொல்லப்படுவதும் இல்லை. சில சமயம் பேரம் பேசுவது போலவும் நடைபெற்று பணம் கூட்டவோ , குறைக்கவோ செய்யப்படுவதா அறிகிறோம்.. தவ்ஹீத் முறைப்படி நபி வழியில் திருமணம் நடத்த தக்கலை அபீமுஅ ஜமாஅத் நிர்வாகம் அனுமதி கொடுப்பதில்லை. இதனால் ஜமாஅத் உறுப்பினர் பக்கத்திலுள்ள ஜமாஅத்தை நாடி தான் விரும்பியபடி திருமணத்தை நடத்தியும் விடுகிறார்கள். இதன் விளைவாக அவரின் மீது (தடா) லடி ஊர் சட்டம் பாய்ந்து குடும்பத்தோடு வெளியேற்றப்படுகிறார்கள். இதே நிலை கத்னா, தவ்ஹீது மற்றும் பல சம்பவங்களுக்கும் இந்த (தடா) லடி ஊர் சட்டம் பயன் படுத்தப்படுகிறது. இந்த மோசமான நிலை இன்னும் இந்த ஜமாஅத்தில் தொடருவது அநியாயமானது எனவே மக்கள் நலன் கருதி இப்போதுள்ள (தடா) லடி சட்டங்களை மறு பரிசீலனை செய்து மக்களின் எண்ணங்களுக்கும் விமர்சனங்களுக்கும் முறையான மதிப்பளித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய மனோபாவம் கொண்ட நல்ல நிறைவாகத்திறன் உடையவர்களை தேர்ந்தெடுத்து ஜமாஅத்தை நடத்தி செல்ல வேண்டும் என்பது பொதுவான ஏற்புடைய கருத்து. எனவே தற்போதைய தக்கலை அபீமுஅ ஜமாஅத் நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு தாமாகவே முன் வந்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து புதியதோர் சிறப்பான நிர்வாகம் பொறுப்பேற்க வழி வகை செய்திட வேண்டுமென ஜமாஅத் மக்கள் எதிர்பார்ப்பார்க்கிறார்கள்

அப்துல் மாலிக்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதரர்களான முகம்மது பஷீரும் , சாகிர் அலியும் கோபங்களையும், அதனால் ஏற்படுகின்ற முறையற்ற வார்த்தை தாக்குதல்களையும் களைந்து முறையான விவாதக் கருத்துக்களை பதிவு செய்ய முன் வரவேண்டும். நீங்கள் இருவரும் தற்போது கையாண்டு வரும் அவதூறுகள் நிறைந்த , அபாண்டமான பழிகள் கொண்ட இஸ்லாத்திற்கு விரோதமான , அநியாயமான வார்த்தைகள் கொண்ட கருத்துக்களை , அல்லாஹ்வுக்காக வேண்டியாவது கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் காரணம் இது முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் நமக்கு அழகானதல்ல. விமர்சனங்களை கண்டு பொறுமையிழக்காதீர்கள். ஆதாரங்களின் அடிப்படையில் விமர்சனம் செய்ய ஒருவருக்கு உரிமை உள்ளதுபோல அதற்கு விளக்கம் சொல்லவும் சம்மந்தப்பட்டவருக்கு உரிமை உண்டு ஆனால் உரிய பதில்களை சரியான ஆதாரங்களுடன் தெரிவியுங்கள் ஏற்பவர்கள் ஏற்கட்டும், ஏற்காதவர்களை விட்டு விடுங்கள். நமது இஸ்லாத்தில் நிர்பந்தம் கிடையாது உண்மைகளை ஒவ்வொருவரும் அவர்களாகவே மனமுவந்து அறிந்து கொள்ளும் காலம் வரை நமது கருத்துக்களை ஆதாரங்களுடன் எத்தி வைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். மாற்றத்தை கொடுப்பவன் அல்லாஹ் மாத்திரமே எனவே சகோதரத்துவத்துடன் விஷயங்களை கையாளுங்கள். இன்ஷா அல்லாஹ் நன்மையிலேயே காரியங்கள் முடிய வேண்டுமென அல்லாஹ்விடம் வேண்டி அவனிடத்திலேயே பொறுப்பை முழுமையாக ஒப்படைப்போம்

நம்பிக்கையுடன் - ஒரு முஸ்லிம்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்
பைலாவை மீறியதால் ஒழுங்கு நடவடிக்கை..???.... "இன்னமல் ஆமாலு பின்நிய்யா " என்பதை நினைவில் நிறுத்துவோமாக. ஒழுங்கு நடவடிக்கை ??? எனும் பெயரில் குறைபாடுள்ள மனிதர்களாகிய நம்மால் உருவாக்கப் பட்ட பைலாவை காட்டி குடும்பங்களை வெளியேற்றுவது போன்ற இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குர்ஆன் ஹதீஸுக்கு உகந்ததா? என்பதை அல்லாஹ்வே நன்கறிவான்... ஆனால்

முஸ்லிம்கள் மக்கள் ஒன்றிணைய தடையாக, மக்களை சர்வ சாதாரணமாக ஜமாத்திலிருந்து வெளியே தள்ளக் கூடிய பைலாக்கள் கட்டாயம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு மாற்றியமைக்கப் பட வேண்டியது காலத்தின் கட்டாயம். மார்க்க சம்மந்தமான வெவ்வேறு அபிப்பிராயங்கள் பலரிடமும் இருப்பது இஸ்லாம் தோன்றிய காலம் முதலே இருந்து வந்திருக்கிறது என்பது நாம் கண்ட சரித்திர உண்மை ஆனால் யாரும் முஸ்லிம் சகோதரர்கள் என்பதை மறக்கவில்லை , அதனால் ஊர் விலக்கமும் செய்யப்படவில்லை கருத்து வேறுபாடுகளுடன் இணைந்தே முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவரவர் மார்க்க சிந்தனை அவரவர்களுக்கே , மார்க்க விஷயங்களை ஆதாரங்களுடன் எடுத்து சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு ஆனால் வற்புறுத்த இஸ்லாத்தில் இடமேயில்லை எனவே ஊர் கட்டுப்பாடு என சுன்னத்துல் ஜமாத்தின் என்று சொல்லப்படும் கொள்கைகளை ஊரிலுள்ள அனைவரும் பின்பற்றியே ஆக வேண்டும் என சட்டங்களும் பைலாக்களும் இயற்றுவது இஸ்லாமிய விரோத செயல் மட்டுமல்லாமல், இந்த பைலாக்களை பிரயோகித்து மக்களை வேதனைக்குள்ளாக்குவது, குடும்பங்களை வெளியேற்றுவது எல்லாம் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது இதை தக்கலை அபீமுஅ வின் தற்போதைய ஜமாஅத் நிர்வாகம் உள்பட யாரும் உணர மறுத்தால் உள்ளங்களில் புதைந்து கணிந்து கொண்டிருக்கும் மக்களின் உணர்வுகள் எரிமலை பிளம்புகளாக நாளுக்கு நாள் உருவெடுத்து இது போன்ற காலத்திற்கு ஒவ்வாத மனித சமுதாய நலனற்ற பைலாக்களையும் அதை முன்னிருத்தி ஒற்றுமைக்கு தடையாக இருப்பவர்களையும் கரைத்து இல்லாமல் செய்து விடும் இன்ஷா அல்லாஹ்............ என்பதை மட்டும் நினைவூட்டுகிறோம்.

ஆகையால் தக்கலை அபீமுஅ ஜமாத்தும் , மற்றும் இது போன்ற நிலைபாட்டை கொண்டுள்ள மற்ற ஜமாத்துக்களும் ,காலம் கடக்கு முன் மறுபரிசீலனை செய்து குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்ற வேண்டும் எனும் நிலைபாட்டில் உலகெங்கும் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம் மற்றும் மனித சமுதாயத்திற்கும் நன்மையாகும் என்பதை உணருங்கள் அல்லாஹ் தவ்ஃபீக் செய்ய துவாக்கள்.....

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்

தக்கலை அபீமுஅ ஜமாஅத்தில் இன்று பல சகோதரர்கள் வெளிப்படையாகவே தவ்ஹீத் சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையிலேயே அவர்களது செயல்களையும் அதாவது தர்ஹாவுக்கு போகாமல் இருப்பது , பீரப்பாவின் ஆண்டுப் பெருவிழாவின் நேர்ச்சைகளை வாங்காமலிருப்பது, நேர்ச்சைகளை சாப்பிடாமலிருப்பது, 3 ம் சியாரத்துக்கு காணிக்கை கொடுக்காமலிருப்பது, ஷிர்க்கை செய்யும் ஆலிமின் இமாமத்திற்கு பின்னால் நின்று தொழாமலிருப்பது ஜூம்மா வுக்கு வேறு பள்ளிகளுக்கு சென்று தொழுது கொள்வது இது போன்று பல செயல்களும் வெளிப்படையாக செய்து கொண்டுதானே இருக்கிறார்கள். இந்த செயல்கள் எல்லாம் அபீமுஅ ஜமாஅத் பின்பற்றி வரும் சுன்னத்துல் ஜமாஅத் செயல்கள் இல்லையே! ஏன் இவர்கள் மேல் ஜமாஅத் இதுவரையிலும் ஊர் விலக்க நடவடிக்கையை எடுக்கவில்லை ? கத்னா , கல்யாணம், மரிப்பு இவைகள் மட்டும்தானா இவர்கள் சொல்லும்
சுன்னத்துல் ஜமாத்தின் செயல்கள் மற்ற செயல்கள் எதையும் பற்றி இந்த அபீமுஅ ஜமாஅத் கண்டு கொள்ளாதா ? இதுவரையிலும் இந்த அபீமுஅ ஜமாஅத் இந்த நிலை பாட்டில்தான் செயலாற்றி வருகிறார்கள். சுமார் 25 -30 குடும்பங்களை வெளியேற்றியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இவர்கள் பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வரும் சடங்கு சம்பிரதாய கொண்டாட்டங்கள் நிறைந்த வழி முறையை சுன்னத்துல் ஜமாஅத் என அநியாயத்திற்கு சொல்லிக் கொண்டு இதைத்தான் ஜமாஅத் மக்களிடம் நிர்பந்தப்படுத்தி இல்லையேல் வெளியேற்றுவோம் என தக்கலை அபீமுஅ ஜமாஅத் நிர்வாகம் தான்தோன்றித்தனமாக இஸ்லாமிய மார்கத்திற்கு விரோதமாகவே செயல்படுகிறது

படித்த மக்கள் என பெருமையாக சொல்லிக் கொள்ளும் தக்கலையில் இந்த ஜமாஅத் நிர்வாகமும் அதன் ஓட்டை ஒடசலான சட்டங்களும் ஜாஹிலியா காலத்து அநீதியானது எனவே படித்தவர்கள் தங்கள் விவேகத்தையும் ஹிக்குமத்தையும் பயன்படுத்தி ஜமாஅத்தையும் அதன் மக்களையும் நல்ல முறையில் ஒற்றுமையுடன் செயல்பட களமிறங்க வேண்டும்