Your comments

Saturday, September 3, 2011

3+10+40=365 ....இது என்ன ?!


 






3 , 10 , 40 ,  365  .....இது என்ன ?!... இது ஒரு ஆன்மீக கணக்கு...?!  ஆமாம்.... 3  ம் ஸியாரத், 10 ம் ஸியாரத், 40 ம்  ஸியாரத் ... பின்னர் ஆண்டுப் திருவிழா 365  வது நாளில்.... யாருக்கு ?!.....பீரப்பா  போன்றவர்களை  அவ்லியாக்கள்  என  சொல்லப்படுகிறவர்களுக்கு ...  யாரால் கொண்டு  வரப்பட்டது ?!... நமது முன்னோர்களால் பாரம்பரியம் என்கிற பெயரால் ....  சரி இனி விஷயத்திற்கு  வருவோம்.....   

இந்த வருட (2011) ஆண்டுத் திருவிழா (கிட்டதட்ட மாற்று மதத்தவர்களின் கோயில் கொடை விழா மாதிரியான  ) அழைப்பிதழை பாருங்கள். இதில்  மிக முக்கியமாக 3 ம்  சியாரத் என்று ஒரு நிகழ்ச்சி  அதாவது  ஒருவரின்  இறந்த மூன்றாவது  நாளை 3 ம் பாத்திஹா என்று இறந்தவருக்கு ஓதி நேர்ச்சையும்  (?!) , சாப்பாடு கொடுப்பது தக்கலை ஊர் உள்பட பல  ஊர்களில் காணப்படும் இஸ்லாம் சொல்லி தராத  ஒரு மாற்று மத சம்பிரதாயம். இதே செயலைத்தான் இங்கே பீரப்பாவுக்கு செய்கிறார்கள் பீரப்பா இறந்த நாளை ஆண்டு விழாவாகவும் (?!), பின்னர் என்றோ இறந்த பீரப்பாவுக்கு வருடா வருடம் 3  ம் ஸியாரத், 10 ம் ஸியாரத், 40 ம்  ஸியாரத் என்றும் இதில் 3  ம் சியாரத்தை சிறப்பு நிகழ்ச்சியாக கொண்டாடப்படும் மவுத்தானால் தான் 3 ம் சியாரத் என்கிற சடங்கு வழக்கமாக  (?!) செய்யப்படும், பின்னர்  அடுத்தடுத்த வருடங்களில் அதே நபருக்கு இந்த சடங்கு மீண்டும் நடக்காது , வழக்கமும் இல்லை  எந்த ஷரீயத் (?!) சட்டத்தில் உள்ளது என்பது செய்பவர்களுக்கே வெளிச்சம்.    ஆனால் இங்கே தக்கலையில்  இப்படி விழா கொண்டாடுவதற்கு (?!) ஏற்ற மாதிரி பீரப்பா வருடா வருடம் மவுத்தாகிறாராமவ்த் ஆனால்தானே வது நாள் சுன்னத்துல் ஜமாஅத் ?! வழக்கப்படி?! 3ம் ஸியாரத் ?! இங்கே பீரப்பா வருடா வருடம் மவுத்   ஆகாமலே  3ம் ஸியாரத் கொண்டாட்டமா ?!     இது அறிவுக்கு பொருந்தும் செயலாஇது எந்த வகை இஸ்லாம் என தெரிய வில்லை , நமது அறிவுகேற்ற மார்க்கமான இஸ்லாம் இதை அனுமதிக்கிறதா ? இத்தனை வழிகேடுகளையும்  தக்கலை APMA ஜமாஅத் ஆலிம் (?!) முன்னின்று  நடத்துகிறா?. அருமை சகோதர சகோதரிகளே  தயவு செய்து அல்லாஹ்வுக்காக வாவது கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள். எப்படிப்பட்ட வழிகேட்டில் நமது செயல்கள் இருக்கிறது என்பதனை நடுநிலையுடன் எண்ணிப்பாருங்கள்..

 பீரப்பா என்கிற பெரியவர், தமிழ்ப் புலமை வாய்ந்த புலவர்இலக்கிய சித்தர்  நாளை மறுமையில் மேலே சொல்லப்பட்டது போல செய்யப்படும் செயல்பாடுகளுக்கும்    எனக்கும் எந்த சம்மந்தமும்  இல்லை என நிச்சயமாக மறுத்து  விடுவார் ... காரணம் பீரப்பா இப்படி செய்ய ஒருபோதும் சொல்லவேயில்லை நாம்தான்  பீரப்பாவை  அவ்லியாக்கி பின்னர் அவரை மதிக்கும் செயல்களாக நமது முன்னோர்கள் உருவாக்கி தந்த இது போன்ற அனாச்சார செயல்களை  தவறாமல்  பின்பற்றி வருகிறோம் என்பதை நம்மால் மறுக்க முடியுமா ?  மறுக்கிறவர்கள்   இதற்கான தகுந்த ஆதாரங்களை தந்துதவுங்கள்..... இந்த வகை செயல்கள் எல்லாம் இஸ்லாத்தில் உள்ளதுதான் என்று நிரூபணம் ஆனால் நாம்  எல்லோருமே சேர்ந்து  ஒற்றுமையா  இன்னும் விமரிசையாக  கொண்டாடலாமே  ....  

சிந்தியுங்கள் அருமை சகோதரர்களே !..... கோபப்படாமல் நடுநிலையுடன் , பீரப்பா எனும் அவ்லியா வட்டத்திலிருந்து வெளியேறி இனியாவது சிந்தித்து பாருங்கள்... சகோதரர்களே !......  அதற்காகத்தான்  மீண்டும் மீண்டும் உங்களை  நான் தூண்டுகிறேன்..... 

 
வஸ்ஸலாம்  
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் ............
தக்கலை கவுஸ் முஹம்மது - பஹ்ரைன்

1 comment:

Anonymous said...

Assalaamu Alaikkum,

These days we are receving lot of messages about thuckalay APMA jamath. The current issue in this blog was really un-islamic culture. We Muslims should not celebrate 3rd fathiha and so on.... This is the culture of Hindusim, Chiristianity, buddist and also from Shia (muslim) community... Please brothers open up your mind , search for the Truth of ISLAM ... Do not simply follow that everything is Islam... Fear Allah.... Fear Akhirath.... Fear Jahannam....

A concerned Muslim From Dubai