Your comments

Wednesday, September 21, 2011

விசாரித்தேன் !.... இதோ பதில்கள் ?!!!

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அன்புள்ள சகோதரர்களுக்கு....... அஸ்ஸலாமு அலைக்கும் 

 அருமை சகோதரர்களே... அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் மீதும், நம் குடும்பத்தார்கள் மீதும் உண்டாகட்டும் என துஆ செய்து கொண்டு   விழிப்புணர்வு கருதி தற்போது சிந்தனைக்குரிய விவாத விஷயமாகி இருக்கும் 3ம் ஸியாரத், 10ம் ஸியாரத், 40ம் ஸியாரத் அதன் பின்னர் 365  வது நாளில் இறந்த நாள்  ஆண்டுப் பெருவிழா  ( 3 + 10 + 40 = 365 )  திதி,  திவசம் போன்ற இறப்பு சடங்குகள்   போன்ற மாற்று மத  சடங்குகள்  நமது தூய  இஸ்லாத்தில் அறியாமையில் புகுத்தப்பட்டு  விமரிசையாக  கொண்டாடப்பட்டு வருவது சம்மந்தமாக கழிந்த  பதிவிலே ஆதாரங்களுடன் பதிவு செய்திருந்தேன். என்ன  காரணங்களுக்காகவோ பல சகோதர்கள் இவையெல்லாம் இஸ்லாத்தில் உள்ளதுதான்?!  என இன்னும்  பரிதாபகமாக  நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே  மேலும் சில விளக்கங்களை இங்கே தருவது எல்லோருக்குமே பயனுள்ளதாக , சிந்தனைக்குரியதாகவே இருக்கும் என்கிற எண்ணத்தில் மீண்டும் உங்களை சிந்திக்க தூண்டுகிறேன் ..... ஒரு சில சகோதரர்களின் வேண்டுகோளுக்கிணங்க,

முதலில் எனது மாமனாரிடமும் பின்னர் தக்கலை அபம ஜமாஅத் சகோதரர் சித்திக் ஆலிமிடமும் 3ம் ஸியாரத் பற்றி விசாரித்தேன். இதோ அவர்களுடைய   பரபரப்பு   பதில்கள் .. 

எனது மாமனார் பதில் :-   ////...... இப்போது இது போன்ற விஷயங்களை   நான் செய்வதில்லையே! , முன்பு செய்திருக்கிறேன்,  கலந்தும்   கொண்டிருக்கிறேன்   ஆனால்  இதெல்லாம்  இஸ்லாத்தில் உள்ளதுதானா? என நீங்கள் கேட்டால், எனக்கு இது பற்றி சரியாக தெரியாது...  காலம் காலமாக எல்லோரும்  செய்தார்கள்  என்பதால்  நானும் செய்தேன்.... ////  

 இரண்டாவதாக நமது தக்கலை APMA  ஜமாஅத் ஆலிம் சித்திக்  அவர்களிடம்  3ம் ஸியாரத் பற்றி விசாரித்தேன்.... இதோ நமது ஆலிமுடைய பதில்

////......சிரித்துக்கொண்டே! .......இப்போது யாரும் கொண்டாடுவதில்லையே ,  மக்களெல்லாம் இதிலிருந்து ஒதுங்கியாச்சில்லா !   இப்போது இது ஒரு பெரிய விஷயமேஇல்லை!  மரிக்காவிட்டால் 3ம் சியாரத்  கிடையாது   ( அப்படியானால் பீரப்பவுக்கு ஏன் வருடா வருடம் 3 , 10 ,40 ஸியாரத்கள் என்று நான்  குறுக்கிட்டு  கேட்டபோது  சகோதரர் சித்திக்  ஆலிமிடமிருந்து பதில் இல்லை ) .. பின்னர் அவரே மீண்டும் தொடர்ந்து    சொன்னார்......   ரசூல் (ஸல்)  அவர்கள் காட்டி  தந்த  வழிமுறையா ?இல்லையா ?என்பதை விட இந்த3, 10, 40  ஸியாரத்களில்  தப்பொன்று மில்லையே  !  என்றுதான் பார்க்க வேண்டும்   மரித்தவர்களுக்கு   நன்மையை சேர்த்து வைப்பதும், ஏழைகளுக்கு உணவு  கிடைக்க செய்வதும் நல்ல காரியம்தானே இதுதான்  இதனுடைய நோக்கமாக இருக்கலாம் ! ................... வருடா  வருடம்  ஜக்காத்   கொடுக்கிறோமா   இல்லையா ?! இது போல இதுவும்  ஒரு நல்ல காரியம்தான் ( அஸ்தஃபிருல்லாஹ்) ...  ஆகையால் இதையெல்லாம் நீங்கள் ஒரு மார்க்க  விஷயமாகவே  கொண்டு  வரக்கூடாது ........  பீரப்பாவுடைய இடத்தில் ஒரு நேர்ச்சை  நிறைவேற்றுவது  தவறான  விஷயமில்லையே !  ( இப்போது நான் குறுக்கிட்டு நேர்ச்சை அல்லாஹ்வுக்கு  மட்டும்தானே செய்ய  முடியும்  அவ்லியாவுக்கு  செய்யக்கூடாதே ! ) இல்லை நீங்கள்  தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்,  அவ்லியாவுக்கென்று   யாரும் நேர்ந்து நேர்ச்சை செய்வதில்லை அவருடைய சன்னதியில் வைத்து மட்டுமே நேர்ச்சை  செய்கிறார்கள்.. ( மீண்டும்  நான் குறுக்கிட்டு ....  இது சம்மந்தமான நான் அறிந்த ஒரு ஹதீஸை  எடுத்து சொன்னேன் ...)  இதோ அந்த ஹதீஸ் ஆதாரம்......   
        
Thaabit ibn al-Dahhaak said: “A man vowed to sacrifice a camel in Bawaanah (according to one report: because a male child had been born to him). He came to the Prophet (peace and blessings of Allaah be upon him) and said: ‘I have vowed to sacrifice a camel in Bawaanah.’ The Prophet (peace and blessings of Allaah be upon him) said: ‘Was there one of the idols of the Jaahiliyyah there that people used to worship?’ They said, ‘No.’ He asked, ‘Did they used to celebrate any of their festivals there?’ They said, ‘No.’ The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: ‘Then fulfil your vow, for there is no fulfilment of vows that involve disobedience to Allaah, or that concern things that the son of Adam does not possess.’” (Reported by Abu Dawood, 2881).

தாபித் இப்னு அல் தஹ்ஹாக் என்பவர் அறிவிக்கிறார் : -  ஆதாரம் - அபூதாவூத் ஹதீஸ் எண் - 2881 

ஒரு மனிதர் புவானா என்ற இடத்தில் வைத்து அறுத்து பலியிடுவதாக அல்லாஹ்வுக்கு நேர்ச்சை செய்திருக்கிறேன் ( ஆண் குழந்தை பிறந்ததால் ) என ரசூல் (ஸல்) அவர்களிடத்தில் vanthu கூறினார், உடனே ரசூல் (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடத்தில் கேட்கிறார்கள் ... அந்த இடத்தில் அறியாமைக் காலத்தில் ஏதாவது  சிலைகளை மக்கள் வணங்கி  கொண்டிருந்தார்களா ? இல்லை  என்றார் அந்த மனிதர்... பின்னர் ரசூல் (ஸல்) அவர்கள் மீண்டும் அந்த மனிதரிடத்தில் கேட்கிறார்கள் அந்த  இடத்தில் ஏதாவதுவிழாக்கள்   கொண்டாடப்பட்டதா ?  நடத்துவதுண்டா ?  இல்லை என்றார் அந்த மனிதர்..... அப்படியானால் நீங்கள் அந்த இடத்தில் நேர்ச்சை நிறைவேற்று என சொன்னார்கள்.

மேற்கண்ட ஹதீஸை சொல்லிவிட்டு ,இதிலிருந்து நமக்கு விளங்குவது நேர்ச்சை அல்லாஹ்வுக்கு  மட்டுமே செய்யப் படவேண்டும் ,  அதுவும்  நேர்ச்சை  நிறைவேற்றப்படக்  கூடிய இடம் மக்களின் சிலை வணக்கமானதாகவோ அல்லது விழாக்கள் கொண்டாடப்படும்  இடங்களாகவோ  இருக்க கூடாது என்பதும் இந்த ஹதீஸின் மூலம்  மிகத் தெளிவாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது , எனவே பீரப்பா அவ்லியாவுக்கென்று செய்யப்படும்  நேர்ச்சையானது   இஸ்லாத்திற்கு  எதிரானது , மட்டுமல்ல அவருடைய சன்னதியில் ( தர்ஹாவில்)  வைத்து  அறுத்து  பலியிடப்படுவதும் நிச்சயமாக நமது மார்கத்திற்கு  எதிரானது என்று சொன்னவுடன் ..... சகோதரர் சித்திக் ஆலிம் அவர்கள்  ஹதீஸில் விழா என்று எங்கே இருக்கிறது ? என என்னிடம் கோபப்பட்டு , போனை கட் பண்ண சொன்னார்... நானும்  கோபப்படாமல்  சலாம் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டேன் ...

அருமை சகோதரர்களே ! .... நிச்சயமாக எனது நோக்கம் யாரையும்  குற்றம்  காண்பதல்ல ..... உண்மை நிலைகளை நாம் எல்லோருமே அறிந்து கொள்ள  வேண்டும் , அறிவுக்கேற்ற மார்கமான நமது தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவிலேயே நாம் எல்லோருமே தெரிந்து கொள்ள முயற்ச்சி வேண்டும் என்கிற  உண்மையான  எண்ணத்தில்தான்  எனது  மாமனாரையும்,   தக்கலை APMA  ஜமாஅத் சகோதரர் சித்திக் ஆலிமையும்  தொடர்பு கொண்டு இது விஷயம் பற்றி விசாரித்தேன்.  அவர்கள்  சொன்ன உண்மை கருத்துக்களைத்தான்  இங்கே பதிவும் செய்திருக்கிறேன்... இதில் யாருக்காவது சந்தேகம்  இருக்குமானால் அவர்களிடமே நேரில் தொடர்பு கொண்டு  விசாரித்துக் கொள்ளலாம். 

என்  அருமை சகோதரர்களே !... கொஞ்சம்  அல்லாஹ்வுக்காகவாவது  சிந்தனை செய்து  பாருங்கள் ....... எப்படிப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களை நாம் நமது தூய இஸ்லாத்தில்  கடைபிடிக்கிறோம்.... ? ஏன் நாம் ஹிந்து மற்றும் கிறிஸ்தவர்களால்  செய்யப்படும்   திதி, கருமாதி , இறந்த நாள் விழா போன்ற  இந்த சடங்குகளையெல்லாம் நமது தூய  இஸ்லாத்தில்  புகுத்த வேண்டும் ?  நாளை  மறுமையில் இதற்கெல்லாம் நாம் கண்டிப்பாக  அல்லாஹ்விடத்தில்  பதில் சொல்லியாக வேண்டுமே ! என்ன சொல்லி தப்பிக்க முடியும் ? ...  இந்த அனாச்சாரங்களையெல்லாம்,  நரகத்திற்குரிய செயல்களையெல்லாம்   ஞாயப்படுத்தி  பேசும்  ஆலிம்கள் துணைக்கு வருவார்களா ?  நல்ல பல  இபாதத்துக்களை நல்ல முறையில் அல்லாஹ்விடத்தில் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு நாம் செய்து கொண்டு இப்படிப்பட்ட  இஸ்லாத்திற்கு எதிரான  ,  மன்னிக்க  முடியாத ஷிர்க்கான  செயல்களையெல்லாம் செய்து  வருவது எதில்  போய் முடியும் என்பதை நீங்களே சிந்தனை செய்து பாருங்கள் இன்ஷா அல்லாஹ் ....  உண்மையிலேயே நடுநிலையுடன்    சிந்திப்பீர்களேயானால்...  அல்லாஹ்  நிச்சயம் நேர்வழி காட்டுவான் என்பதில்  சந்தேகம் கொள்ள முடியாது சகோதரர்களே !... அதற்காகத்தான்  உங்களை மீண்டும் மீண்டும் சிந்திக்க தூண்டிக்கொண்டேயிருக்கிறேன்...  அன்பு சகோதரர்களே !   சிந்திக்க எது நம்மை தடுக்கிறது ?.....  அவ்லியா வட்டத்திலிருந்து ,  அவ்லியாவின் பாச  பிடியிலிருந்து வெளியே  வந்து உண்மையான  இஸ்லாத்தை   தெரிந்து கொள்ள முயற்ச்சி  செய்யுங்கள்  அருமை  சகோதரர்களே ! ... அல்லாஹ் நம் எல்லோருக்கும் பறக்கத் செய்யட்டும் தொடர்ந்து நேர்வழியை காட்டட்டும் என அல்லாஹ்விடத்தில் துஆ செய்து கொள்கிறேன்

வஸ்ஸலாம்  
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் ............
தக்கலை கவுஸ் முஹம்மது - பஹ்ரைன்
* குறைகள் என்னை சாரும், நிறைகள் ஏக இறைவனை சாரும் ..............
படைக்கப்பட்டவர்களை விட்டு, விட்டு படைத்தவனை மட்டுமே  நாம்  வணங்குவோம்   !

No comments: