Your comments

Friday, October 7, 2011

தக்கலை ஜமாஅத் தலைவரால் அரங்கேற்றப்பட்ட இசை - Video


 இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக இருப்பதால்  கண்டிப்பாக மக்களை இசையில் மூழ்காமல் காப்பது நம் மீது கடமை.
ஆனால் இமாம் இப்னு ஹஸ்ம், மற்றும் தற்காலத்தில் தோன்றிய யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ  இன்னும் சிலர் இசையைக் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான் என்று கூறுகிறார்கள்.
இசை இஸ்லாத்தில் கூடாது ஆதாரம்  1புகாரி ஹதீஸ் Volume :6 Book :74  ஹதீஸ் எண்: 5590.
அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார் 'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்) நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான் 

இசை இஸ்லாத்தில் கூடாது ஆதாரம் 2அஹ்மது : 4307.

நாஃபிவு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தம் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள். அவர்கள் '(அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா?' என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு, 'எனக்குக் கேட்கவில்லை' என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன்' என்று கூறினார்கள். ---குழலோசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம். 
இசை இஸ்லாத்தில் கூடாது ஆதாரம் 3 :  அஹ்மது : 2494. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக் கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
குறிப்பு: மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் பொதுவாக இசை தடைசெய்யப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இருந்தாலும்  ஷிர்க் மற்றும் இஸ்லாமிய விரோத கருத்துக்கள், கோட்பாடுகள் இல்லாத பாட்டுக்களுக்கு இஸ்லாமில் தடை இருப்பதாக நமக்கு தெரியவில்லை  ஆனால் இசைக் கருவிகளுடன் பாட்டு இசைப்பது மற்றும் ஷிர்க், இஸ்லாமிய விரோத கருத்துக்கள், கோட்பாடுகள், அளவுக்கு மீறின புகழ்கள் அடங்கிய பாட்டுக்கள் போன்றவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டவைகள் என்பது ஹதீஸ் ஆதாரங்களின் படி மிக தெளிவானது.
ஆனால் இன்றைய நிலைமை :  ஹிந்து  மதக் கோயில் களில்  பாடப்படும் பாடல்களின்  இசையை  போன்று  பீரப்பா  அவ்லியாவின்  ஞானப்புகழ்ச்சி  பாடல்களை  மேள தாளங்களுடன்     தக்கலை ஜமாஅத்  தலைவரால்  " தன்னை  பிழிந்த  தவம் "  என்ற  பெயரில் தக்கலை  தாகிர் என்பவரின் சாதனையில் CD க்களாக பீரப்பா  அவ்லியாவின் சன்னதியில் (அரங்கத்தில்) விழா எடுத்து பலரின்  ஆசியுடனும்  பாராட்டுதல் களுடனும் விமரிசையாக  வெளியிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது.  ஆக மொத்தத்தில் பீரப்பா அவ்லியாவின் ஞானப்புகழ்ச்சி  மாற்று மதக் கலாச்சார அனாச்சாரா இசை வடிவில் வெளிவந்ததில் தக்கலை அபீமுஅ ஜமாஅத்  பெருமை அடைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.ஜமாஅத்   ஆலிமாக  பணி  யாற்றுபவர்  கூட இந்த கூத்துக்கு  உடந்தையாக  இருந்திருக்கலாம்  மக்களும்  இந்த CD க்களை    வாங்கி  பக்தியுடன் வீடுகளில், கார்களில் , தர்ஹாக்களில் , விசேஷ நிகழ்ச்சிகளில் இந்த ஷைத்தானின் அடிச்சுவடுகளான இசையில் மனம்  லயித்து கேட்டு வருகிறார்கள் அஸ்தஃபிருல்லாஹ்...  நமது முஸ்லிம் சமுதாயம்  போகிற போக்கு  மிகுந்த வருத்தத்தைத்தான் அளிக்கிறது.... கீழேயுள்ள Picture   மீது  கிளிக் செய்து  கேட்டுப்பார்த்து  நீங்களே....ஒரு முடிவுக்கு வரலாம்.. உங்கள்  கருத்துக்களையும் இங்கே பதிவு செய்வதன் மூலம் மக்களுக்கு நாம் ஒரு விழிப்புணர்வை  ஏற்படுத்தய்ப்புள்ளது....................................................................

 
Peerappa Awliya's (?!) - GnanapPuhalchi-Song
Singer.:-Kumari Aboobucker
Direction-Tky Haleema & Kumari Aboobucker
Production - Thakkaley Thahir

5 comments:

Anonymous said...

Assalamu alikum

This music is exactly as Hindu Religion's song in Karnatik style.... Pityyyyyyyyyyy..... these people done this out of ignorance of ISLAM. May Allah save all Muslims from these kind odf Satanic foot steps

a.katharmaideen said...

nam makkalin ariyamaiyai allah neeki thara arul seiya vendum endru ellam vallah allahvidum dua seivom

BA MARICAR said...

by Basheer Ahamed,
The music is same like hindu temples music, but the poetry is best tamil literature ,more meaning full to praise Allahu jallah jalalahu,
peer mohamed Appa poetry are deep tamil literature,to understand we must have deep tamil language knowledge,peer Appa never sing a song, he wrote the poetry to praise Allahu, now this peoples made modification ,that Peer Appa not responsible,(Maan Arafa Nafsuhu, Fahkath Arafa Rabuhu")"Kalakal Inshana Ahsani bith thakveem"

Ghouse Mohamed - Thuckalay said...

அஸ்ஸலாமுஅலைக்கும்............சகோதரர் பஷீர் அஹ்மத் அவர்கள் ஞானப்பாட்டின் இன்னிசையை ஹிந்து கோயில் இசை என கருத்து தெரிவித்திருக்கிறார் , மேலும் பீரப்பா தமிழ் இலக்கியம் எழுதியுள்ளார் என்றும் சொல்லியிருக்கிறார்... அல்ஹம்துலில்லாஹ் அவரின் இந்த கருத்துக்களில் எனக்கு மாற்று கருத்து கிடையாது ஆனால் அல்லாஹ்வை புகழ்ந்து பாடியிருக்கிறார் என்று பொதுவாக சொல்லியிருப்பதில்தான் பிரச்சினை காரணம் நிறைய பேர் இப்படித்தான் எண்ணி கொள்கிறார்கள் மட்டுமல்லாமல் இந்த பாட்டு பாடினால் அல்லாஹ்விடத்தில் நன்மைதானே கிடைக்கும் என்று பய பக்தியுடன் பல நிகழ்ச்சிகளிலும் பாடி நேர்ச்சை மற்றும் திருவிழா என கொண்டாடி வருகிறார்கள். இதற்கு நமது மார்கத்தில் அனுமதி உண்டா ? எவ்வளவு அறியாமை ? சரி அல்லாஹ்வை புகழ்ந்து பாடிய பாடல் வரிகள் என்று சொல்லப்படும் அதே ஞானப்புகழ்ச்சி பாடல்களில் ஷிர்க் எனும் கொடிய பாவங்கள் நிறைந்த வரிகள், இஸ்லாமிய அடிப்படைக்கு விரோதமான சூபிசத்தத்துவங்கள், ஹிந்துக்களின் அத்வைத கொள்கை தத்துவங்கள் போன்றவைகளும் காணப்படுகிறதே .. இந்த லிக் ஐ http://haiderghouse.blogspot.com/2011/03/blog-post_05.html கிளிக் செய்து கூடுதல் விபரங்கள் அறிந்து கொள்ள வேண்டுகிறேன் இது எப்படி ஒரு முஸ்லிமால் நன்மை நாடி படிக்க முடியும் ? பீரப்பாவின் மீதுள்ள பாசத்தால் அநியாயத்திற்கு எதையாவது எழுதி நியாயப்படுத்தாதீர்கள் என்பது எனது அன்பான வேண்டுகோள் அர்த்தம் தெரியாமல் பாடுவதற்கு இது ஒன்றும் குர் ஆன் இல்லையே அஸ்த ஃ பிருல்லாஹ்..... அவர் அல்லாஹ்வை புகந்து இலக்கியமோ, செய்யுளோ பாடவோ எழுதவோ செய்தால் அதன் நன்மை தீமை அவரையே சாரும் .. இடையில் நாம் யார் ? இதில் நாம் ஏன் திருவிழா எடுத்து பாடி கொண்டாட வேண்டும் ? இனியாவது ஞானப்பாட்டை பாடுவதையும் கலாச்சார அனாச்சார சீரழிவுகளின் ஆண்டுத்திருவிழா, பெருவிழா கூத்துக்களில் கலந்து கொண்டு அவ்லியாவின் அருள் பெறுவதையும் அல்லாஹ்வுக்கு பயந்து நிறுத்தி விட்டு குர்ஆன், சுன்னாஹ் காட்டி தந்த வழிகளில் நமது மார்கத்தை கடை பிடிக்க முயற்ச்சி செய்து இம்மை மறுமைக்கான நன்மைகளை தேடிக் கொள்வோம். சகோதரர்களே... கோபப்படாமல் சிந்தனை செய்து பாருங்கள்.... அல்லாஹ் நாடினால் உண்மைகள் உங்களுக்கும் புரிய வரும்.

Man Arafa Nafsuhu, Fahkath Arafa Rabuhu - இதன் தமிழாக்கம் : ‘யார் தன்னை அறிந்து கொண்டானோ அவன் தனது இரட்சகனை அறிந்து கொண்டான்’ - இது சூபிக்களின் தத்துவம்தான், இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளுக்கு விரோதமானது மேலும் இது எத்தகைய அடிப்படையுமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அறிஞர் சுயூத்தி (ரஹ்) அவர்கள் தனது ‘தய்லுல் மவ்ழூஆத்’ எனும் நூலிலும் (263), ஷெய்க் முல்லா அலிகாரி(ரஹ்) தனது ‘மவ்ழூஆத்’எனும் நூலிலும் இதை இடம்பெறச் செய்துள்ளனர்.
--வஸ்ஸலாம்
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் ............
தக்கலை கவுஸ் முஹம்மது - பஹ்ரைன்

Anonymous said...

அஸ்ஸலாமுஅலைக்கும்

பாட்டு பாடி இறைவனை புகழ்ந்து வேண்டிக்கொள்வதும் , அதிலும் குறிப்பாக இசைக் கருவிகளுடன் இறைவனைப் பற்றி பாடுவது எல்லாம் மற்ற மதங்களில் காணப்படும் இறை வழிபாட்டு முறை இது நமது இஸ்லாமிய அகீதாவுக்கு ( கொள்கைகளுக்கு ) முரணானது. இது போன்ற வழி தவறிய எல்லா செயல்பாடுகளிலிருந்தும் அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் துஆ செய்து கொள்வோம்