Your comments

Friday, September 23, 2011

தர்காஹ் என்பது என்ன?எதற்காக உருவாக்கப்பட்டது? யார் அறிமுகப்படுத்தியது?

தர்காஹ் என்பது என்ன?எதற்காக உருவாக்கப்பட்டது? யார் அறிமுகப்படுத்தியது? (இதோ விளக்கம்)
 தர்காஹ் என்பதன் விளக்கம்
தர்காஹ் என்பது பாரசீக மொழியிலிருந்து வந்த சொல்லாகும் (Persian: درگه)இதற்கான விளக்கம் என்னவென்றால் ஒரு கட்டிடம் என்பதுவே.  இந்த  தர்காஹ்  கட்டிடத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் பாரசீக நாட்டைச் சேர்ந்த சூஃபிக்கள் தான் மேலும் இவர்களால் வழிகாட்டப்பட்ட இந்த தர்காஹ் வழிமுறைக்கும் நபிகள் (ஸல்) காட்டித்தந்த இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமு மில்லை. இது முழுக்க முழுக்க வழிகேடாகும்.
 தர்காஹ் முதன்முதலில் எதற்காக கட்டப்பட்டது!
சூஃபியிஷத்தை பாரசீகத்திலிருந்து பரப்ப வந்த சுஃபியிஷத்தைச் சேர்ந்த சில மார்க்க அறிஞர்கள் (உங்களைப்போன்ற படிப்பறிவுள்ள அறிஞர்கள் இவர்களுக்கு எந்த மறை ஞானமுமில்லை) பாரசீகத்தில் நிலவி வந்த வன்முறைக் கொடுமைகளுக்கு ஆளாகி தங்கள் கொள்கையையும் உயிரையும் இழந்துவிடக்கூடாது என்றும் சூஃபி கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் பல நாடுகளுக்கு பிரயாணம் மேற்கொண்டார்கள்.   அன்றைய காலகட்டங்களில் இந்தியா செல்வச்செழிப்பில் தழைத் தோங்கியிருந்தது எனவே சொந்த தாய்நாட்டை துரந்த சூஃபி அறிஞர்கள் இந்தியாவில் தங்கள் கொள்கைகளை பரப்பி வந்தனர்.  இவர்கள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தங்கள் கொள்கைப் பிரச்சாரம் மேற்கொள்ளவும் ஒரு இடத்தில் நிலையாக தங்கவும் (அதாவது ஹெட் ஆபிஸ்) அமைத்தனர்.  இந்த தலைமைச் செயலகத்தில் இந்த சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) ஒன்று கூடி தங்களுக்குள் இருக்கும் கஷ்ட நஷ்டங்களையும், நல்ல நிலைமைகளையும் பரிமாறிக் கொள்ளவும் சூஃபிக் கொள்கைகளை வீரியப்படுத்தவுமே பயன்பட்டது எனவேதான் நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் தர்காஹ் கட்டிடங்கள் (கிளை அலுவலகம்) எழுப்பினர் அந்த கட்டிடத்தில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது இதுவே தர்ஹா கட்டிடம் எனப்படும்.  இவ்வாறு இந்த கட்டிடங்களில் தங்குவதற்கு பாரசீக மொழியில் கான்காஹ் (khanqah) என்று அழைப்பர்.  பின்னர் சூஃபி அறிஞர்கள் மரணித்துவிட்டால் அவர்களை கவுரவப் படுத்தும் விதமாக அவருடைய கப்ரை சமாதியாக கட்டி எழுப்பி அதற்கு பிரம்மாண்டமான கட்டிடங்களையும் உருவாக்கி பலவிதமான கவுரவ ? ஷிர்க்கானா வஹாதினா , வமுற்சிதினா, போன்ற பல  பல    பட்டங்களையும் நம்மவர்களே பெருமிதத்துடன்   சூட்டிக்கொண்டு  அவரைஅவ்லியாவாக பிரகடனப்படுத்திவிடுவார்கள்.    மேலும்  இந்த அவ்லியாக்கள்  கராமத் என்ற பெயரில் செய்துகாட்டிய  ஒரு சில சம்பவங்களால் பரவசம் அடைந்து  ஒரு வித mooda  நம்பிக்கையுடன்  ? அவ்லியாக்களின் பக்தர்களாக  ? மாறிவிடுகிறார்கள் .   மாற்று மத பல சாமியார்களும் இது போல்,மேலும் இதை விட பல அற்புதங்களையும் மக்களுக்குகாட்டினார்கள் என்ற கட்டுக் கதைகளை நாம் எல்லோரும் அறிந்ததுதான் . இதே கதைகளையும்தான் இங்கே இஸ்லாம் என்ற பெயரில் சூஃபிக் களின் செயல்களில் நமது மக்களும் பரவசம் அடைந்தது    இந்த அவ்லியாக்கள் எல்லாம்  அல்லாஹ்வின் நேர்வழிபாதையில் சென்று  சொர்க்கத்தில் இருப்பவர்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள் . இப்படிப்பட்ட இந்த   அவ்லியாக்கள் ஆகிய மகான்களிடம் நாம் துஆ கேட்டால் அல்லாஹ்விடம் சொல்லி நமக்கு வாங்கி தந்துவிடுவார். காரணம் இவர்கள் எல்லாம் சாதாரணமான   மனிதர்கள் இல்லை அல்லாஹ்விடம் நெருக்கமாக இருப்பவர்கள்  என்று சகட்டுமேனிக்கு நம்புகிறார்கள். இதனால் ஆண்டுப்பெருவிழாக்களும் , அறுத்து பலியிடலும் , நேர்ச்சைகளும் இஸ்லாத்திற்கு விரோதமாக சரமாரியாக ஊருக்கு ஊரு குதூகலமாக  நடத்தி மகிழ்கிறார்கள் இதற்கு சில ஆலிம்களும் துணை நின்று  பக்க பலம் கொடுக்கிறார்கள் .மேலும் எல்லா தர்ஹாக்காளிலும் உண்டியல் வைத்து    பக்தர்களிடம் காணிக்கையாக  பணம் வசூலிக்கிறார்கள் ! நேர்வழியின் செயலா இது? இதைத்தான் ரசூல் (ஸல்) அவர்கள்   நமக்கு காட்டித்தந்தார்களா? சுவர்க்கம் வாக்களிக்கபட்ட   சஹாபா பெருமக்கள்   இதைத்தான் பின்பற்றினார்களா? சிந்திக்க ஏன் அல்லாஹ் தந்த மனம் மறுக்கிறது ? அல்லது அடம் பிடிக்கிறது ?    இது இஸ்லாமிய கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட அணுவளவும் தொடர்பில்லாத தத்துவமாகவும் தவறான கொள்கையுமாகும்.  

No comments: