Your comments

Saturday, September 17, 2011

எப்படியிருந்தேன் இப்படி ஆயிட்டேன் ! ! !

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

அன்புள்ள சகோதரர்களுக்கு....... அஸ்ஸலாமு அலைக்கும்  றஹ்மத்துல்லாஹி   பறகாத்துஹூ 
நான் ஞானப்புகழ்ச்சியை அதனுடைய ஒரிஜினல் ராகத்தில் சூப்பராக பாட வேண்டும் என்கிற இளவயது ஆர்வக்கோளாறில்   4  குருவிடம்  கற்றுக் கொண்டேன்   அதாவது  லத்தீப் சாஹிப்,  செண்டை பெத்தாப்பா , ஆலிம்சா பீர்முகம்மத், மற்றும் எனது லக்கர் வலியாப்பா  ஆகியோரிடம் , இதில் ஒன்றிரண்டு பேருக்கு தட்சிணை எல்லாம் கொடுத்து , பின்னர் சம்பளமும் கொடுத்து டிரைனிங்  எடுத்து பார்த்து பார்த்து பாடிய சப்த மேளம்  அல்லவா...பாட்டு நல்லாத்தான்   பாடியிருக்கிறேன். என்பதை கேட்ட மாத்திரத்திலேயே தெரிகிறது. என்னிடம் கூட இந்த கிளிப்  இல்லை ...ஒரு வகையில்  நல்லதுதான் ...எப்படியிருந்தேன்  இப்படி ஆயிட்டேன் ! ! !  .....என நினைத்து பார்த்து என்னுடைய ஈமானை இன்னும் அதிகரிக்க மிக்க உதவியாக இருக்கும்  என்பதில்  சந்தேகமேயில்லை  
ஆக சுமார் 5-6 வருடங்கள் முன்பாக  நான் பஹ்ரைனில் பாடிய வீடியோ கிளிப்பை  தேடிப்பிடித்து , கஷ்டப்பட்டு டைட்டில் எல்லாம் போட்டு ............................................... Youtube  ல்  Upload 

பண்ணி நியாயமாய்யா ??? என்று ஆதங்கத்துடன் இந்த சகோதரர் கேட்டிருப்பதை  பார்க்கும்போது....ஒருவகையில்  அவருடைய கேள்வி  பரிதாபமான தொனியில் அமைந்து  இருக்கிறது....!!!!!! என்றுதான் தோன்றுகிறது. என்ன செய்ய.. அல்லாஹ்வின் ஹிதாயத் எனக்கு கிடைத்து விட்டதே...  இந்த  குப்ரியத்திலிருந்து  நான் வெளியேறி விட்டது அல்லாஹ்வின்  நாட்டம் ,  அவனன்றி எதுவுமே நடக்காதே .............. அல்லாஹ்விடம் நீங்கள் சண்டை செய்ய துணிந்தது போல இருக்கிறது உங்கள் செயல்கள் ... அஸ்தஃபிருல்லாஹ்.........
அல்ஹம்துலில்லாஹ்...........உண்மையறிந்தேன்.............சிந்தித்தேன் .............
செயல்பட்டேன் ............. மாறிவிட்டேன் ..............  அல்ஹம்துலில்லாஹ்  
இப்போது நீங்களே சொல்லுங்கள் .... இது ...... நியாயமேதானய்யா.................  
குறிப்பு :- இந்த மாதிரிப்பட்ட  ஒரு சில தக்கலை சகோதரர்கள் நமது கேள்விகளுக்கோ , கட்டுரைகளுக்கோ முறையான விளக்கங்களை குர்ஆன், சஹீஹான ஹதீஸ்கள் அடிப்படையில் தெரிவிப்பதையோ அல்லது சிந்தித்து பார்ப்பதையோ  தவிர்த்து விட்டு தனி மனித தாக்குதல்களை கழிந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிறப்பாக(?!)  அல்லாஹ்விடத்தில் நன்மையை(நரகத்தை) நாடியோ  செய்து வருகிறார்கள் என்பது நாம் எல்லோருமே அறிந்த செய்திதான். இனியும்  தொடர்ந்து  செய்ய தயங்க  மாட்டார்கள் காரணம்  இவர்களிடத்திலே  ஐவேளை தொழுகை இருக்கிறதா ? என்பது மிகப் பெரிய சந்தேகம்..... தொழுகையை   முறையாக நிலை நாட்டுபவர்கள்   குறைந்த பட்சம் அல்லாஹ்வுக்காவாவது அஞ்சுவார்கள் .... ஆக படைத்த  அல்லாஹ்வுக்கே   இவர்கள்   அஞ்சவில்லை  என்றால்    ????????????????????... சரி ....அல்லாஹ்விடத்தில் இவர்களுக்காக நாம் துஆ செய்வோம்...
ஐவேளை தொழுகையை முறையாக நிலை நாட்டுபவர்களாக நீங்கள் இருப்பீர்களேயானால்  தைரியமாக சொல்லுங்கள்... உடனே நான் இந்த மக்கள் மன்றத்திலே  பகிரங்கமான மன்னிப்பை உங்களிடம் கேட்டுக்கொள்ள தயங்க மாட்டேன்  அத்தோடு அல்லாஹ்விடத்திலும் மன்னிப்பை கேட்டுக் கொள்வேன்... நாங்கள் தொழுவது  எங்களுக்கும்  அல்லாஹ்வுக்கும்  இடைப்பட்டது இடையில் நீங்கள் யார் என குறுக்கு கேள்வி கேட்டு  ஒதுங்காமல், தப்பிக்காமல்  தைரியமாக சொல்ல முன்வாருங்கள்..... மக்களுக்கும் தெரியட்டுமே...நீங்கள் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டே இந்த செயல்களை செய்கிறீர்களா ?  அல்லது ....???????????????????????... எதுவாக இருந்தாலும் உங்களிடம் தொழுகை இல்லை என்பது எதோ ஒருவகையில் ( உங்கள்  செயல்பாடுகள் மூலம்) நிரூபணம் ஆகிக்கொண்டேதான் இருக்கிறது... எனவே நீங்கள் பகிரங்கமாக ஒத்துக் கொள்ளாவிட்டாலும் ... இனியாவது நம்மைப் படைத்த இறைவனுக்கு  தொழுது  நன்றியை  செலுத்துவதோடு  முஸ்லிம் என்பதையும் நிலை நாட்டிக்  கொள்வது  ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நல்லது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க  முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுமாறு சகோதரத்துவத்துடன் கேட்டுக்கொள்கிறேன்    
தொழுகையிருந்தால்   நீங்கள் செய்துவரும்  அவதூறு செயல்கள்,  மோசமான  வார்த்தைகள் , அப்பட்டமான குற்றசாட்டுக்ககள்  போன்றவைகள் படிப்படியாக குறைந்து நல்ல நிலையை, நல்ல செயல்பாடுகளை செய்யும் நிலையை  விரைவில்  எட்டிவிடுவீர்கள்... இது  மனிதர்களுக்கு  அல்லாஹ்வும் அவனது ரசூல்(ஸல் சொன்ன செய்திகள்
................தொழுகையை நிலை நாட்டுவீராக..! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும் , தீமையை விட்டும் தடுக்கும் - அல் குர்ஆன் 29 :45  

என்னருமைச் சகோதர்களே ! நிச்சயம் மரணம் வரும் நாம்  என்றோ ஒருநாள் இறந்து விடுவோம் . தொழுகையைப் பாழ்படுத்திய நிலையிலேயே நாம்  இறக்க நேரிட்டால் நம்மை விட நஷ்டத்துக்கும் கைசேதத்துக்குமுரியவர்கள்  வேறு யார்?. கப்ரிலே நமக்கு  எப்படி வரவேற்பிருக்கும் என நாம்  எப்போதாவது சிந்தித்ததுண்டா? மறுமையில் எழுப்பப்பட்டதும் நம்  கதி என்னவென்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தோமா ?... சிந்திக்க வேண்டும் சகோதரர்களே !.... அதற்காகவே உங்களை தூண்டுகிறேன்
என் அன்பு சகோதரர்களே ! .... நீங்கள் தயவு செய்து என் மீது ஆத்திரப்படாதீர்கள் ...... நான் நிச்சயமாக யாருக்கும் எதிரி இல்லை.... நான் எழுதுவதும்,  சொல்வதெல்லாம் நான் அறிந்த உண்மையான இஸ்லாம் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள்  அடங்கிய  விஷயங்கள் மட்டுமே இதில் யாரையும்  தாக்குவது எனது எண்ணமில்லை இதை நான் பல தடவை நான் எழுதியுமிருக்கிறேன் , நான் வெளியிட்ட எனது CD யிலும்   இதை சொல்லியுமிருக்கிறேன்.  நான் உள்பட  பலரும் சிந்தித்ததால் இன்றைக்கு குப்ரான அனைத்து காரியங்களிலிருந்தும் வெளியேறி  உண்மையான இஸ்லாத்தை தெரிந்து கொண்டு அதன்படி அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கான அத்தனை முயற்ச்சிகளிலும்  இறங்கியுள்ளோம் .. எனது அருமை சகோதரர்களான உங்களையும் சிந்திக்க தூண்டுகிறேன் என்பதே இந்த மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு தெரிவிக்கும் உண்மையான  செய்தி..... வாருங்கள் ....என் அன்பு சகோதரர்களே !....  சிந்தியுங்கள் ..... குர்ஆன் , மற்றும் சுன்னாஹ்வை  முறையாக அறிந்து   கொள்ள முயற்ச்சி செய்யுங்கள்   ....  அல்லாஹ் என்றென்றும் நமது நற்செயல்களுக்கு நற்கூலி தந்து நமது அமல்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென துஆ செய்து கொள்வோம் ... ஆமீன்....

   நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)
ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)
வஸ்ஸலாம்  
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் ............
தக்கலை கவுஸ் முஹம்மது - பஹ்ரைன்
  

1 comment:

Abu darwesh said...

mashallah thabarakallah