Your comments

Monday, March 7, 2011

சுன்னத்தா பித்அத்தா...?

at Sunday, September 26, 2010 Posted by Ruqaya Abdullah
அஸ்ஸலாமு அலைக்கும்.!!அளவற்ற அருளாளன் நிகரே இல்லா அன்புடையவன் அந்த வல்லோன் அல்லாஹுவின் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்
சுன்னத் என்பது நபியவர்கள் எதை செய்தார்களோ மேலும் எதை செய்யுமாறு மக்களுக்கு ஏவினார்களோ அவற்றை பின்பற்றுவதே ஆகும்
அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்;. நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (3;132)அல்லாஹு ஆகிய அவனுக்கும் அவனது தூதருக்கும் பணியுமாறு அல்லாஹு நம்மை ஏவுகின்றான். இதில் ஒன்றையேனும் நிராகரிக்கும் போது அவன் முஷ்ரிக் அல்லது முனாபிக் எனும் நிலையை அடைய நேர்கிறது ( நௌதுபில்லாஹி மின்ஹா)அல்லாஹுவை ஈமான் கொண்டு அவனிடமே உதவி தேட வேண்டும் நாம் கை ஏந்தி கேட்க தகுதியானவன் , எமக்கு பதில் தர கூடியவன் , எமக்கு பாதுகாவலன் எம்மை படைத்தவனே அன்றி அவனால் படைக்க பட்டவைகள் அல்ல.அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள். (7;197)நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான். (7;196)நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (7;194மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (22;73)அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்). (29;41)அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், "நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்" (என்பதுவேயாகும்). (39;65)ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக! (39;66)கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. (46;5)உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (13;14)தெளிவான அத்தாட்சிகள் இத்தனை இருக்க விழுந்தால் கூட '' யா முஹிய்யிதீனே '' என்று முஹியிதீனை அழைப்பது சரியா? அவ்லியாக்களிடம் உதவி தேடுவது சரியா? இது நபி வழியா?நபியவர்கள் கூற தாம் கேட்டதாக அபு மர்சத் (ரலி) அறிவிக்கின்றார்கள் கப்ருகளின் பக்கம் தொழவும் வேண்டாம் அதன் பக்கம் உட்காரவும் வேண்டாம் (நூல் முஸ்லிம் )நபியவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள் உங்களில் ஒருவர் நெருப்பு தணலின் மீது உட்கார்ந்து அது அவருடைய உடையை எரித்து அவருடைய உடலில் படுவது கப்ரின் மீது உட்காருவதை விட சிறந்தது ( நூல்; முஸ்லிம்)எனது கப்ரை (கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்து சொல்லுங்கள். அது என்னை வந்தடையும் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (ஆதாரம்: அபூதாவுத்.)யஹுதிகளும், நஸராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.தர்கா செல்வது கபூர் வணக்கம் சரியா? இது சுன்னத்தா? கபுரின் முன் நின்று இறைஞ்சுவது விளக்கில் எண்ணை ஊற்றி எரிப்பது அதை தொட்டு தலையில் தடவிக்கொள்வது இது போன்ற அனாச்சாரங்கள் சரியா? இது சுன்னத்தா?

அல்லாஹ்வுக்கு வழிபடுவதை நேர்ச்சை செய்தவர், (அதை நிறைவேற்றி) அவனுக்கு வழிபடுவாராக! அல்லாஹ்வுக்கு மாறுசெய்ய நேர்ச்சை செய்தவர்; (அவ்வாறு அதை நிறை வேற்றி) அவனுக்கு மாறுசெய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர்; ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர்: ஆயிஷாரலியல்லாஹூ அன்ஹு. ஆதாரம் : புகாரீ, அஹ்மது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

அவ்லியாக்களுக்கு நேர்ச்சை செய்வது சரியா? இது சுன்னத்தா?காலத்தை திட்டாதீர்கள் காலமாகவும் அல்லாஹுவே இருக்கின்றான் ( நபிமொழி முஸ்லிம்)சபர் மாதம் பீடை என்பது சரியா?மவ்லீது, கத்தம் சரியா? ஆயத்துகளை தாயத்துகளாக அணிந்து கொள்வது சரியா?சலவதுன்னாரிய சரியா?கந்தூரி எனும் பெயரில் ஆடல், பாடல் அரங்கேறுவது சரியா?கொடியேற்றம், கூத்தாட்டங்கள் சரியா?நபிமார்களில் எந்த நபி இதை செய்து காட்டினார்கள்?குரான், ஹதீஸ் ஆதாரம் இருக்கின்றதா?

"
நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (46;4)

இணை வைப்போருக்கு மறுமையில் நிலை என்ன?இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். "இன்னும் கொடூரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான் நரக) நெருப்; பு அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்; அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (22;72)ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். (68) பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவற்றையும் நிச்சயமாக வேறு பிரிப்போம். (69) பின்னர், (ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (19;70)மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். (71) அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை (ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம். (19;72)நீங்கள் அழைத்தவை மறுமையில் உங்களுக்கு உதவுவார்களா? அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர். (46;6)நீங்கள் செய்பவைகளில் எது சுன்னத் ?இன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை"( 36;17)இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (29;43)செய்பவைகள் சுன்னத்துகளே இல்லை ஆகவே உங்கள் பெயர் சுன்னத் வல் ஜமாஅத் என்று இருப்பது நியாயமா?அல்லாஹு நம் அனைவரையும் பாதுகாப்பானாக எம் அனைவருக்கும் ஹிதாயத்தை தருவானாக...ஆமீன்!!!

No comments: