Your comments

Saturday, October 8, 2011

தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர் விலக்க நடவடிக்கை



அடக்குமுறைகளுக்கு எதிரான சமுதாயக்குரல்
தக்கலை அபீமுஅ ஜமாத்தில் தவ்ஹீது  , கத்னாமற்றும்  திருமணங்கள் போன்றவைகள் தங்கள் பாரம்பரிய சுன்னத்துல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் முறைகளுக்கு ஒத்துவரவில்லை என்றால் ஊர் விலக்கம்,. திருமண ரெஜிஸ்டர்   தர மறுத்தல் உறவினர்களின் திருமணங்களில் ... கலந்து ...கொள்வதை .....தடைசெய்தல்,..இறந்தவர்களை... ...
அடக்கம்...... செய்ய   அனுமதி   மறுத்தல் போன்ற இஸ்லாமிய சமுதாய விரோத செயல்களான இந்த அநியாய நடவடிக்கைகளை வக்பு  வாரியத்தின்  சட்டங்களையும்   மீறி  ஜமாஅத் மக்கள்மேல் எடுத்து  வருகிறார்கள் . இந்த அநியாயமான நடவடிக்கைகளை.எடுத்து  வரும் தக்கலை ..அபீமுஅ..ஜமாஅத்... நிர்வாகத் திற்கு உங்கள்  கருத்துக்களை இங்கே பதிவதின் மூலம்  உங்கள் குரல்களை ஓங்கிஒலிக்கவும் அதன் மூலம்.....ஒழிக்கவும்...முன்வாருங்கள்............
................. 
நான் ஜமாஅத்துக்கு எழுதிய பரபரப்பு கடிதம் இதோ இந்த லிங்கில் 
https://docs.google.com/viewer?&a=v&pid=explorer&chrome=true&srcid=0B7ZvPeJun4BaMjIwMWIwMTItYTc4YS00NTljLTk2MGYtZGViZjNmYjlmZGU1&authkey=CMfolY0I

hl=en_US&pli=1
பாதிக்கப்பட்டவர்களின் நியாயக்குரல்

Friday, October 7, 2011

தக்கலை ஜமாஅத் தலைவரால் அரங்கேற்றப்பட்ட இசை - Video


 இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக இருப்பதால்  கண்டிப்பாக மக்களை இசையில் மூழ்காமல் காப்பது நம் மீது கடமை.
ஆனால் இமாம் இப்னு ஹஸ்ம், மற்றும் தற்காலத்தில் தோன்றிய யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ  இன்னும் சிலர் இசையைக் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான் என்று கூறுகிறார்கள்.
இசை இஸ்லாத்தில் கூடாது ஆதாரம்  1புகாரி ஹதீஸ் Volume :6 Book :74  ஹதீஸ் எண்: 5590.
அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார் 'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்) நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான் 

இசை இஸ்லாத்தில் கூடாது ஆதாரம் 2அஹ்மது : 4307.

நாஃபிவு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தம் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள். அவர்கள் '(அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா?' என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு, 'எனக்குக் கேட்கவில்லை' என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன்' என்று கூறினார்கள். ---குழலோசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம். 
இசை இஸ்லாத்தில் கூடாது ஆதாரம் 3 :  அஹ்மது : 2494. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக் கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
குறிப்பு: மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் பொதுவாக இசை தடைசெய்யப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இருந்தாலும்  ஷிர்க் மற்றும் இஸ்லாமிய விரோத கருத்துக்கள், கோட்பாடுகள் இல்லாத பாட்டுக்களுக்கு இஸ்லாமில் தடை இருப்பதாக நமக்கு தெரியவில்லை  ஆனால் இசைக் கருவிகளுடன் பாட்டு இசைப்பது மற்றும் ஷிர்க், இஸ்லாமிய விரோத கருத்துக்கள், கோட்பாடுகள், அளவுக்கு மீறின புகழ்கள் அடங்கிய பாட்டுக்கள் போன்றவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டவைகள் என்பது ஹதீஸ் ஆதாரங்களின் படி மிக தெளிவானது.
ஆனால் இன்றைய நிலைமை :  ஹிந்து  மதக் கோயில் களில்  பாடப்படும் பாடல்களின்  இசையை  போன்று  பீரப்பா  அவ்லியாவின்  ஞானப்புகழ்ச்சி  பாடல்களை  மேள தாளங்களுடன்     தக்கலை ஜமாஅத்  தலைவரால்  " தன்னை  பிழிந்த  தவம் "  என்ற  பெயரில் தக்கலை  தாகிர் என்பவரின் சாதனையில் CD க்களாக பீரப்பா  அவ்லியாவின் சன்னதியில் (அரங்கத்தில்) விழா எடுத்து பலரின்  ஆசியுடனும்  பாராட்டுதல் களுடனும் விமரிசையாக  வெளியிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது.  ஆக மொத்தத்தில் பீரப்பா அவ்லியாவின் ஞானப்புகழ்ச்சி  மாற்று மதக் கலாச்சார அனாச்சாரா இசை வடிவில் வெளிவந்ததில் தக்கலை அபீமுஅ ஜமாஅத்  பெருமை அடைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.ஜமாஅத்   ஆலிமாக  பணி  யாற்றுபவர்  கூட இந்த கூத்துக்கு  உடந்தையாக  இருந்திருக்கலாம்  மக்களும்  இந்த CD க்களை    வாங்கி  பக்தியுடன் வீடுகளில், கார்களில் , தர்ஹாக்களில் , விசேஷ நிகழ்ச்சிகளில் இந்த ஷைத்தானின் அடிச்சுவடுகளான இசையில் மனம்  லயித்து கேட்டு வருகிறார்கள் அஸ்தஃபிருல்லாஹ்...  நமது முஸ்லிம் சமுதாயம்  போகிற போக்கு  மிகுந்த வருத்தத்தைத்தான் அளிக்கிறது.... கீழேயுள்ள Picture   மீது  கிளிக் செய்து  கேட்டுப்பார்த்து  நீங்களே....ஒரு முடிவுக்கு வரலாம்.. உங்கள்  கருத்துக்களையும் இங்கே பதிவு செய்வதன் மூலம் மக்களுக்கு நாம் ஒரு விழிப்புணர்வை  ஏற்படுத்தய்ப்புள்ளது....................................................................

 
Peerappa Awliya's (?!) - GnanapPuhalchi-Song
Singer.:-Kumari Aboobucker
Direction-Tky Haleema & Kumari Aboobucker
Production - Thakkaley Thahir