Your comments

Saturday, March 5, 2011

அப்படியா ?! உண்மையாகவா ?!


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

அன்புள்ள சகோதரர்களுக்கு....... அஸ்ஸலாமு அலைக்கும்  றஹ்மத்துல்லாஹி   பறகாத்துஹூ 
சல்மான் ருஷ்டியோ, தஸ்லீமா நஸ்ரினோ, அருண்ஷோரியோ, ராம் ஸ்வரூப்போ இஸ்லாத்துக்கு முரணான எதையேனும் இஸ்லாம் என்பதாக எழுதினால் ஒட்டு மொத்தமாகக் கொதித்தெழுகின்றனர் நம்மவர். ஆனால், பீரப்பா, குணங்குடி மஸ்தான், உமறு புலவர்  , போன்ற  நம்மூர்ப் புலவர்கள் இஸ்லாத்தின்மீது வீசியுள்ள விஷக்கருத்துக்களை  கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்; அல்லது கண்டுகொள்ள மறுக்கின்றனர். இதோ பீரப்பா புலவர் ( அவ்லியா?!) வின் ஞானப்பாடல்களில்
  ஓம் ,    சக்தி,    சிவன்,   வருணன் ,    கருடன்,    வேல்பிடித்து,     திருமால்,   மான்,   மயில்,    திருவாசம்,     திருப்பதி,    சிவமயம் ,    தேவர்,    கைலாசம், சிவனேன்றியம்ப,     வலம்புரி சங்கு ,     நாரணனும்,      பல் தேவர்களும் , பாற்கடல்,   பச்சை பவளக்கடல்,    தேவுகள்,     சிலையோடி,  
சிவமரத்தின் வித்து,    சித்து நவ ,   யோகிகள், வேத நூல் சாஸ்திரங்கள்,   குருபாதம்  ,   தாமரை - இது போன்ற பல சொற்கள் இடம் பெற்றுள்ளது  

மேலே காணப்பட்டவைகள் யாவும்  ஹிந்து மதத்தின் அடிப்படை   நாமகரண சொற்கள் என்பது
தான் நாம்  எல்லோரும் அறிந்தது .... மேலும் இந்த பாடல் வரிகளை நாம் படிக்கும் போது ஹிந்து மத சாஸ்த்திரங்களை படித்த உணர்வே ஏற்படுகிறது... ஆனால் இல்லை... இல்லை இவையெல்லாம்  அல்லாஹ்வைப் புகழ்வதுதான் இந்த சொற்கள்  என  நான் சார்ந்துள்ள தக்கலை  அபீமுஅ  ஜமாஅத்   மக்களால் புனிதத்துடன் நன்மை கருதி பயபக்தியுடன்   " "ஞானப்புகழ்ச்சி "   பாட்டு புஸ்தகத்தை  வைத்து வருடம் தோறும் பீரப்பா அவ்லியாவுக்கு (?!) திருவிழா  எடுத்து  பரிதாபமாக  வாதாடி  வாதாடி பாடப்பட்டு வருகிறது. 




புனிதமாக நன்மையை நாடி பாடப்பட்டுவரும் இப்படிப்பட்ட ஞானப்பாடல்களுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் நமக்கெல்லாம் தெரியப் படுத்தினால் நமது சந்தேகம் நீங்குவதோடு இந்த ஞானப்பாட்டை பாடுவதால் நன்மைதான் என ஆதாரங்களுடன் தக்கலை அபீமுஅ ஜமாஅத்  மக்களோ அல்லது மற்ற  இஸ்லாமிய  சகோதரர்களோ தெரியப்படுத்தினால் சேர்ந்து இம்மை ,மறுமைக்கான  நன்மைகளை அள்ளிக் கொள்ள நாம் எல்லோருமே  பாடுவோமே ........ 


யாராவது முன் வருவார்களா ? .... இதுவரையிலும் யாரும் முன் வரவில்லை... இப்போது  சொல்லுங்கள் அப்படியா ?! உண்மையாகவா ?!  என்கிற கேள்வி இன்னும் விடை  தெரியாமல்  பரிதாபமாக தொடர்ந்து  கொண்டேயிருக்கிறது என்பது  நிதர்சனம்தானே.......

  
தக்கலையில் சமாதியான பீரப்பா அவ்லியாவின் பீரப்பாவின்  ஞானப்புகழ்ச்சி பாடல்களில் காணப்படும் ஹிந்து மத கொள்கையான 'வஹ்தத்துல் உஜூது' (இயல்வன யாவும் இறையுருவே - அதாவது எல்லாம் கடவுள்தான் ) எனும் ஹிந்துக்களின் நாமகரணத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் கீழ்கண்ட பாடல் வரிகளை பார்ப்போம்.
1.    "  நீயே யுனக்கு சுஜூது செய்தாய் பின் நினைந்துருவாய் "  ஞானப்புகழ்ச்சி 118
2.    நீயே  இப்புவிக்குள் ரசூலாக வந்தவன் " - ஞானப்புகழ்ச்சி 118
3.    சக்தியாய் சிவனாய் யிந்த தாரணி தன்னிலாக்கி - ஞானப்புகழ்ச்சி – 4
4.    சிவனேன் றேழூன்தூக்கத்துள்ளோ ரொளியே தெரிசித்தபின் - ஞானப்புகழ்ச்சி 404
5.    " சுக்கோ சிவனிருப்பன் சோணிதமோ வல்லவிஞ்சி- ஞானப்புகழ்ச்சி  23 
6.    சிவனருணன் றோழுகையினுக் குரியவனு நீயே - ஞானப்புகழ்ச்சி – 54
7.    " வருணனுடல் பதறியுயர் வரவருள்வை நீயே – ஞானப்புகழ்ச்சி – 64
8.    " கருடனினை  விட்டெனைப்படைத்த ஹக்கே யெனது  தீவினையால் ஞானப்புகழ்ச்சி – 82
9.    " கால்பிடித்து தூங்கியிரு கண் விழித்தோருக்கு திருமால் கொடுத்து காண வரும் வல்லோனே  வேல்பிடித்து - 568
10.  "மானைப் புலியாயு மயிலையுமுன் னீன்ற பெருமானை திருவாசமுறும் வல்லோனே   ஞானமுறு - 575
11.  " திருப்பதியிற்  சொல்லாமல் தீங்கு பல பாவமுஞ்செய் - ஞானப்புகழ்ச்சி பாடல் – 580
12.  " எண்ணு மெழுத்தி லொளியுருவா யெவ்வுயிர்க்கு மன்னன் சிவமய மென்றாள்பவனே குன்னென்றுல-  587
13.  " பாற்கடலும் பச்சை பவளக் கடலுந் தரளப் பூக்கடலும் நூலும் பொலிவானவனே - ஞானப்புகழ்ச்சி பாடல் – 605
14.  " தேவர்க் கரிய குலக் கொழுந்தே - ஞானப்புகழ்ச்சி – 357
15.   " ககன மதினந் தரமேழுங் கைலாசமு மரசாள்பவனே சிவனேன்றியம்ப வரமளித்த - ஞானப்புகழ்ச்சி பாடல் – 358
16.   " வாசிகள் வாசி யெனும் வலம்புரி சங்கீன்ற மணி யோசைக்கு ளோசை தரு முட்பொருளே- ஞானப்புகழ்ச்சி – 556
17.   " காபிர்களும் பேய்களும்  நற் கமல நாரணனும் பல் தேவர்களும் போற்றி நின்ற சீமானே - ஞானப்புகழ்ச்சி – 550
18.   " ஈரா ரெழுத்திலிருப்பவனே  ஈராறும்  ஓதாத மந்திரத்தி னுட் பொருளே ஞானப்புகழ்ச்சி 540
19 . "ஜின்னும்,சீவனும் வெகு சீவனுறு தேவுகளு  நீயே - ஞானப்புகழ்ச்சி பாடல் – 60
20.   " சிலையோடி வருமுனுயிர் சிதறாமல் நல்லுதவி செய்வாய் நிறைந்த பொருளே -– 126
21. " ஆவன்றும்  ஈயென்றும்  ஊவென்றும்  நின்றவுனையாரென் றிறைஞ்ச  வடியேன் ஞானப்புகழ்ச்சி பாடல் – 127
22.   " நாய்கண்டு சீயென்ற நடுவேயிருந்தெனது  நாட்டம தறிந்த வனுநீ ஞானப்புகழ்ச்சி– 128
23.   " முத்தரள மொன்றாய்  முளைத்த சிவமரத்தின் வித்தாக  வந்து விளைந்தோனே சித்துநவஞானப்புகழ்ச்சி– 564
24.   " யோகிகளுக்கு குருவாணவனே  யெமதுள்ளத் தெழுந்தருளே ஞானப்புகழ்ச்சி பாடல் – 425
25.   " ஒமேன்றதையன் புறுமதுவு ளிவுமடியே னுணராமல்  ஞானப்புகழ்ச்சி பாடல் – 270
     "   Page  125  ல் ஞானப்பூட்டு பாடலை எந்த ராகத்தில் பாட வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது
          - கீர்த்தனை , ராகம் உசேனி , தாளம் ரூபகம் - இஸ்லாமிய கீர்த்தனைகளா ?
27.  "   வேத நூல் சாஸ்திரங்கள் மேய்யிதனை யன்றி வெகு  பார நூற் கற்றார் பலனில்லை - ஞான மணிமாலை - 179 
28   "   Page  190  ல் ஞானக்குறம் பாடல் பாட வேண்டிய முறை - கீர்த்தனம் , ராகம் புன்னாகவராளி , இனி - சாப்புதானம்
           பாடல்  வரிகள்- கைதாருங் கைதாரும் ஹபீபு முஹம்மத் அப்துல்  காதிரே கைதாருங் கைதாரும் -  இவர் யார் ?   முஹியுத்தீன் அப்துல் காதரா?
29.   "  Page  197  ல் ஞான ரத்தினக்குறவஞ்சி  பாடல்கள் - அதாவது சிங்கா சிங்கி குறத்தி ஸ்டைலில் இந்த பாட்டை   பாட வேண்டும் - - உதாரணத்திற்கு இதோ கீழே
                                          i.    ஆதிக்கு   முன்ன ரனாதியு  மென்னடி  -    சிங்கி 
                                           ii.    அதுஅந்த கருக்குழி முந்த விருளரை -  சிங்கா
30.   page  -205  ஞான ஆனந்தக்களிப்பு - கள்ளனை காவலனாக வைத்து  தானும் கள்ளனுக்குள்ளே கலந்தேயிருந்து
3      page  -212  திரு மெஞ்ஞான சரநூல் - திருவான தேவர் முதற் பெரியோர்  மற்ற தேவரையுந்த் திருமுன்னே வரவழைக்க குருபாதம் பணிந்துமுப தேசங்  கேட்கக் கொள்ளையிடப் பதியேறக்   குளிக்க நீரில் 
32. page  -217 ஞான நடனம் - தாமரை ரண்டி லிருந்து வாடியதாபரமே குருவே பூமதுவாகிய வாசமி லோசை புரிந்தே
      இருப்பவனே தேனமு துங்கனி - வாயமு துண்டு திருந்திய செம்மதியால் நீவரும் யானறி யும்படி யேதரு வாய்நீ -     ஹூ ஹூ ஹூ

சந்தேகம் : பீரப்பா பாடியதாக சொல்லப்படும் இந்த  ஞானப்பாட்டுக்களின்   தொகுப்பை உண்மையில் பீரப்பா பாடியது இல்லை எனவும் , பீரப்பாவின்  சமாதிக்கு பக்கத்திலே சமாதியாகி இருக்கும் யகீன் முஹம்மது (?!) என்று சொல்லப் படுபவர் அதாவது இவர் முதலில் ஹிந்துவாக இருந்து பின்பு பீரப்பாவின் சீடராக மாறியவர் , இவர்தான் பீரப்பாவின் மனதில் தோன்றியதை பாடலாக எழுதினர் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. இது ஒருவேளை உண்மையாகவும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது காரணம் நான் மேலே குறிப்பிட்டுள்ள பாடல் வரிகளை உன்னிப்பாக நீங்கள் கவனித்து படித்து பார்த்தால் ஹிந்து கலாச்சாரமும் அதனோடு தொடர்புடைய வார்த்தைகளும் சரளமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதோ அதற்கான உதாரணங்கள் 
 சக்தி, சிவன், வருணன்  ,  கருடன்,  வேல்பிடித்து,  திருமால், மான் , மயில் , திருவாசம், திருப்பதி, சிவமயம் ,   தேவர், கைலாசம், சிவனேன்றியம்ப, வலம்புரி சங்கு , நாரணனும், பல் தேவர்களும் , பாற்கடல்,  பச்சை பவளக்கடல், தேவுகள், சிலையோடி, சிவமரத்தின் வித்து, சித்து நவ , யோகிகள், ஓம் ,  வேத நூல் சாஸ்திரங்கள் , குருபாதம்  , தாமரை  -
 இப்படிப்பட்ட வார்த்தைகளை  எல்லாம் இஸ்லாம் என்ற பெயரில் ஞானப்பாட்டில் (?!) இடையிடையே மிக சரளமாக சர்வ சாதாரணமாக புகுத்தப்படுத்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது. மேலும் அல்லாஹ்வை பற்றிக் குறிப்பிடும் போது வென்றும் வென்றும் , வென்றும் நின்றவுனை என பாடப்படுள்ளது... அஸ்தஃபிருல்லாஹ்..... இதையெல்லாம் நாம் படிக்கும் போது ஹிந்து மத சாஸ்த்திரங்களை படித்த உணர்வே ஏற்படுகிறது
 தக்கலை அபீ முஅ ஜமாஅத் மக்கள்மற்றும் இந்த ஷிர்க்கானா  பாடல்களை  பல  நிகழ்ச்சி களிலும் நன்மையை நாடி  பாடுபவர்கள்  சிந்திப்பார்களா?? ஞானப்புகழ்ச்சி  பாடலுக்கு  விரிவுரை இருப்பதாக நம்மால் அறிய முடியவில்லை    .... அடிக்கடி மின்னஞ்சலில் பீரப்பாவுக்காக வாதாடும் ஒரு தக்கலை சகோதரர் சாஜித் அஹ்மத் இதன் அர்த்தம் கவிக்கோ அப்துல்ரஹ்மானுக்கு தெரியும்இவருக்கும்  மட்டும்தான் தெரியுமா ?!) அவர் சொன்னால் நாங்கள் கேட்போம் என்றும் வாதாடினார்இப்படி இந்த சகோதரர்  நினைப்பது  சரியாக இருந்தால் கவிக்கோ அப்துல்ரஹ்மானை   உடனடியாக தொடர்பு கொண்டு பீரப்பா பாடல்களை புனிதமாக நன்மையை நாடி படிப்பவர்களுக்கு இதன் அர்த்தங்களை  கொடுப்பது  நல்லது இல்லையெனில் நமது சகோதரர்கள் பலரும் அறியாமையில் புனிதம் என்கிற  முறையில்  இது போன்ற ஷிர்க்கான பாட்டுக்களை  பாடி நரக நெருப்பை  அள்ளிக் கொள்ளும் நிலைமையில் தள்ளி விடும்.
எது எப்படி இருந்தாலும் அர்த்தம் தெரியாமல் குர்ஆனை ஓதினால் நன்மை உண்டு என்றுதான் நமது இஸ்லாம் சொல்லி தருகிற பாடம் ஆனால் பீரப்பாவின் ஷிர்க்கான இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளுக்கு விரோதமான ஞானப்புகழ்ச்சியை பாடினால் அல்லாஹ்விடத்தில் நன்மையா கிடைக்கும் அதுவும் அர்த்தம் என்னவென்று தெரியாமலேயே பக்தியுடன் பாடினால் என்ன கிடைக்கும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் சிந்தித்து பார்ப்பது நல்லது  

4 comments:

BA MARICAR said...

Ghouse Mohamed Assalamu Allaikum,
From Basheer Ahamed, thnks for your explanation, Peer Mohamed Appa wrote a tamil poetry in literature ,what he was thinking in his mind,it was his own opinion,he never say to celebrate his poem as a holy book, he never say his poetry will bring the heaven to all muslims,if this innocent muslims doing wrong things and celebrating as festival,Peer Mohamed Appa is not responsible for this innocent activities, next you mentioned some tamil words belongs to Hindu religion, its wrong because Hindu peoples using some Tamil words for their religion, Tamil language is not belongs to any religion,same way Arabic language also not for only muslims,Allah(God) also not belongs to any certain religion or caste(Allahu kaira kaalikeen)(Allahu kaira Rajeekeen),you have mentioned no meaning for Peer Appa poetry, its also wrong, please improve you deep knowledge in Tamil language upto literature level,next you have mentioned "Mann arrafa nafsuhu fakath arafa rubbuhu" it is not hadees or quran sentence, this is a proverb in Arabic language, if we want to know about Allah's "Neemath" "Rahmath" to this human beings,atleast we try to understand our self,just our human body is a miracle from Allahu,who created,how he created this human body and how functions,if you know Anatomy please see inside our body functions,cerebral,psychiatry ,digestive, orthopedic,cardiac,endocrine,reproductive,many more systems inside,it functions itself by the grace of Allah,(you know "Afala enthuruna ellal ibbli laifa kullikath" Quran not only a Tawheed book, quran is a scientific ,research book to understand many more things,beyond our human brain power,Peer Appa just write a small poetry from his small knowledge in Tamil language, If our innocent people doing wrong things,we can not blame any Annbiya,Awliya,or rasool, this is our peoples innocency , please read quran not only as a tawheed book, its a miracle of many more things beyond our limits,you and me simple human beings,all our knowledge is limited, we try to improve a little bit about the Allahu,Rasool,our body function,about this universe,before our life ends Insah Allah

Ghouse Mohamed - Thuckalay said...

Wa alaikkum wassalaam Dear Bahseer Ahmad,

// Peer Mohamed Appa wrote a tamil poetry in literature ,what he was thinking in his mind,it was his own opinion,he never say to celebrate his poem as a holy book, he never say his poetry will bring the heaven to all muslims,if this innocent muslims doing wrong things and celebrating as festival,Peer Mohamed Appa is not responsible for this innocent activities//


Al Humthulillaah… this is what we are explaining to our Thuckalay APMA jamaath Brothers & Sisters, that such celebrations and all related activities are completely WRONG in Islam. As per our beloved Rasool (sal)’s teaching, all these activities will lead to Hell Fire


//next you mentioned some tamil words belongs to Hindu religion, its wrong because Hindu peoples using some Tamil words for their religion, Tamil language is not belongs to any religion,same way Arabic language also not for only muslims,Allah(God) also not belongs to any certain religion or caste(Allahu kaira kaalikeen)(Allahu kaira Rajeekeen),you have mentioned no meaning for Peer Appa poetry, its also wrong, please improve you deep knowledge in Tamil language upto literature level//



When I mentioned those words, you have to look at the whole sentence to get the meaning. Unfortunately, No one has explained the real meaning till date. Indeed, it is very well resembles to some kind of Hindu religious activities if you look at the sentences. Moreover, Peerappa has explained about Tareekha method and also practiced by himself as I mentioned earlier. ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் (ஞானப்புகழ்ச்சி – 156, ஞான மணிமாலை, பாடல் 11) எனும் நான்கு நிலைகளின் ஊடாகத்தான் இறைவனை அறிய முடியும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே கூறியுள்ளதாக, பீரப்பா பாடுகின்றார்.This concept is totally against ISLAM as per Qura’an & Sunnah.


Peerappa has another Hindu Religious concept, 'வஹ்தத்துல் உஜூது' (இயல்வன யாவும் இறையுருவே - அதாவது எல்லாம் கடவுள்தான் ) எனும் ஹிந்துக்களின் நாமகரணத்தை தெளிவாக சொல்கிறது.. which he explains very clearly in the following sentences of his Poem.



" நீயே யுனக்கு சுஜூது செய்தாய் பின் நினைந்துருவாய் " ஞானப்புகழ்ச்சி 118

" நீயே இப்புவிக்குள் ரசூலாக வந்தவன் " - ஞானப்புகழ்ச்சி 118



அல்லாஹ்விடத்தில் பீரப்பா சொல்கிறார் " நீயே உனக்கு சுஜூது செய்து கொண்டாய் "

அல்லாஹ்விடத்தில் பீரப்பா சொல்கிறார் " நீயே இந்த பூமிக்குள் ரசூலாக வந்தவன் "



அஸ்தஃபிருல்லாஹ்..... எவ்வளவு அபத்தமானது

Ghouse Mohamed - Thuckalay said...

Continuation of the above comment

இந்த தத்துவம் இப்னு அரபி எனும் ஸூஃபியின் தத்துவம் இந்த இப்னு அரபிதான், தன் காலத்துக்கு முன் இருந்த ஸூஃபிக் கோட்பாடுகளை எல்லாம் நெறிப்படுத்தி, அதை ஒரு பேரியக்கமாகக் கட்டியெழுப்பினார். 'வஹ்தத்துல் உஜூது' (இயல்வன யாவும் இறையுருவே) எனும் நாமகரணமும் இவரால்தான் சூட்டப்பட்டது. இவர் எந்த அளவுக்கு வழிகேட்டில் ஊறித் திளைத்தார் என்பதை அவருடைய கவிதைகளைப் படித்த மாத்திரத்தில் நாம் புரிந்து கொள்ளலாம்.



இபுனு அரபி பாடுகிறார்:

வெவ்வேறு படிமங்களுக்கு என் இதயம் திறந்தே கிடக்கிறது. இது கிறித்துவ சந்நியாசிகளின் துறவுமடம்; சிலைகள் கொலுவிருக்கும் கோயில்; அரபு நாட்டு மான்களின் மேய்ச்சல் வெளி; ஹஜ் பயணிகளுக்கு இது கஃபாப் பள்ளி; தவ்ராத்தின் வரைபலகையும் இதுவே; குர் ஆன் வேதமும் இதுவே; நான் அன்பு எனும் மதத்தையே அனுஷ்டிக்கிறேன். அதன் பயணம் எத்திசையை நோக்கி அடியெடுத்தாலும் சரியே. அன்பு எனும் மதமே என்னுடையது; அதுவே என் நம்பிக்கை.



சமயங்களின் பெயரால் பிரிவினை பேசுவதை ஸூஃபிகள் வெறுத்தனர். எல்லாச் சமயங்களும் மூலநிலையில் ஒரே உண்மையைச் சொல்கின்றன என்பது ஸூஃபிகளின் நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இப்னு அரபியிடம் இப்படிக் கவிதையாக உருவெடுக்கிறது.இறைவன் மனிதனாக அவதரிக்கிறான் என்பதும் மனிதனில் இறைவனைக் காணலாம் என்பதும் இப்னு அரபியின் கோட்பாடாகும். இறைவன், தன்னை அறிந்து கொள்வதே மனிதன் வாயிலாகத்தான் என்கிறார் இப்னு அரபி:



அவன் என்னுடைய பரிபூரணத்தை வெளிப்படுத்தி அவனுடைய சாயலில் என்னைப் படைத்து என்னைப் புகழ்கிறான். நான் அவனுடைய பரிபூரணத்தை எடுத்தியம்பி அவனுக்குக் கீழ்ப்படிந்து அவனைப் புகழ்கிறேன்.அவன் எப்படி என்னிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருக்க முடியும்? இதற்காகவேதான் நான் படைக்கப் பட்டிருக்கிறேன். நான் அவனை அறிகிறேன்; அவனுடைய உள்ளமையைக் கொணர்கிறேன்.

ஸூஃபிஸம் என்ற போதை மருந்து

“ ஸூஃபித்துவக் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும். ஸூஃபித்துவம் என்பது பிளாட்டோவின் கருத்துக்களுடன் இந்து சமயத்தின் வேதாந்த சித்தாந்தங்கள் கலந்தது. மேலும் ஸூஃபித்துவம், போதை தரும் விஷம் கலந்த மதுபானம். இக்கருத்துக்கள் குர்ஆனின் தெளிவான சட்ட திட்டங்களுக்கு முரண்பட்டது ” என்கிறார் கவிஞர் அல்லாமா முஹம்மது இக்பால்.


In view of the above mentioned details, we have to just discard all such poems, which is against Qura’an & Sunnah of our beloved Prophet Mohamed (sal). I reinstate my point that whatever Peerappa has done, it is between Allah and himself. We should leave peerappa and his poems in that way.

//"Mann arrafa nafsuhu fakath arafa rubbuhu"// -

This was used as a Hadith by majority of people who called themselves as Sunnath Wal Jamath ( not practicing Sunnah of prophet) as hadith to justify many of there un Islamic activities. But I agree with your explanations, which is every human being should THINK….


// Peer Appa just write a small poetry from his small knowledge in Tamil language, If our innocent people doing wrong things,we can not blame any Annbiya,Awliya,or rasool, this is our peoples innocency//

Here the issue is Awliya ? Who has the knowledge to identify (or) certify a person as Awliya other than Allah ? and his rasool (sal) … We Muslim should believe that human beings can never ever attribute anyone as AWLIYA… a person is pious (or) not will be judged by only Allah. Therefore, it will be sin, if we attribute a person as AWLIYA. Now the question is Peerappa is Awliya (or) Not ?... definitely we do not know, then why do we call him as AWLIYA and built Dhargha and appointed a POOJARI ( motheenaar) to look after the kabar of so called AWLIYA…all these are WRONG and leads to Hell fire according to the teaching and warning of our beloved Rasool (sal)

Peerappa (or) any other Muslims should be respected in a way of that was shown by our Prophet (sal), all other activities in the name deceased peoples are Innovations and all Innovations will end up in Hell fire

Anonymous said...

i invited one non muslim to attend the naat event where we will appreciate allah and his Rasool Allah S.A.W he said he will come surely and then said we going to appreciate the lord krishna
i said no
he said you call allah and i called krishna that its
..
i said that you can call allah with any name with correct meaning talk about allah fazilat