Your comments

Thursday, November 13, 2014

அடாவடி கட்ட பஞ்சாயத்து ஊர் விலக்க நடவடிக்கை செல்லும் என செய்தவர்கள்தான் இனி நிரூபிக்க வேண்டும் !...
முஸ்லிம்களுக்கு ஜமாஅத் என்பது உரிமை சார்ந்த ஒரு அங்கம் தாங்கள் காலம் காலமாக வாழ்ந்து வரும் ஊர்களிலுள்ள ஜமாத்தை சார்ந்து இருப்பவர்களை எக்காரணம் கொண்டும் ஊர் விலக்கம் செய்ய எந்த ஒரு நிர்வாகத்திற்கும் உரிமை இல்லை இதனை அரசு சார்ந்த வக்பு ஆணையம் பல் நேரங்களில் மிக தெளிவாகவே கட்டளையிட்டுள்ளது . பல கோர்ட்டுகளிலும் இதனை உறுதி செய்து தீர்ப்பும் வந்துள்ளது !..ஆனால் இதனை தக்கலை APMA ஜமாஅத் உள்பட ஒரு சில ஊர் நிர்வாகங்கள் ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து அடாவடித்தனம் செய்கிறார்கள் எனபது நிதர்சனம் !...
இந்த நிலைய மாற்ற நிர்வாகத்தால் சட்ட விரோதமாக ஊர் விலக்கம் செய்யப்பட்ட அன்பர்கள் அனைவரும் இனிமுதல் அந்தந்த ஊர்களில் நடக்கும் பொது கூட்டங்களில் கண்டிப்பாக , அமைதியாக கலந்து கொண்டு தங்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் .. காரணம் சட்டப்படி விலக்கப்பட்டவர்கள் அந்தந்த ஊர்களின் உறுப்பினர்களே ! ... நீங்கள் உறுப்பினர்கள் இல்லை என நிர்வாகம் சொல்லுமானால் அதை அதை அவர்கள்தான் சட்டப்படி நிரூபிக்க வேண்டும் ..
நிர்வாகம் தகராறு செய்யுமானால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ! .. உரிமையை பறிப்பதற்கு எந்த ஒரு நிர்வாகத்திற்கும் உரிமை இல்லை எனபது இந்திய சட்டம் ...
எனவே ஊர் விலக்கம் செய்த நபர்களை அந்தந்த ஊர் பொது கூட்டங்களில் கலந்து கொள்ளவும் அவர்களுக்கான எல்லா உரிமைகளையும் நிர்வாகத்தார் தடுக்க கூடாது என்று பொதுவாக வேண்டுகோள் விடுக்கிறேன்
 -தக்கலை கவுஸ் முஹம்மத்



No comments: