Your comments

Tuesday, September 13, 2011

இறைநேசர்கள் யார் ?

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
 அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்......

இறைநேசர்கள் யார் என்பதையோ  அல்லது ஒருவரை நல்லவரென்றோ  உலகத்தில் தீர்மானிக்க முடியுமா?.......திருமறைக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நேசர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். எதற்காகவும் கவலைப்படவும் மாட்டார்கள்.அவர்கள் விசுவாசம் கொண்டு, (இறைவனை) அஞ்சி நடப்பார்கள்.”  (10:62-63)

யாருடைய உள்ளத்தில் ஈமானும் இறைவனை அஞ்சி நடக்கும் தக்வாவும் உள்ளதோ அவர்கள் அனைவரும் இறைநேசர்கள் என்று இவ்வசனம் சொல்கிறது. இவ்விரண்டு பண்புகளையும் மனிதக்கண்களால் எடைபோட முடியாது. உலகில் எமது பார்வையில் மகானாகத் திகழ்ந்தவர் மறுமையில் மகாபாவியாக இருக்கலாம். உலகில் எமது கண்ணோட்டத்தில் பாவியாக இருப்பவன் மறுமையில் மிகச் சிறந்த பேறுபெற்றவனாகத் திகழலாம். எனவேஒருவரை நல்லவர் கெட்டவர் என்று தீர்மானிக்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரமாகும். நிச்சயமாக மனிதனால் தீர்மானிக்க முடியாது.  யாரைப்பற்றி இறைவன் நபிகளாருக்கு இவர்நல்லவர்  என்று அறிவித்துக் கொடுத்தானோ அவரைப்பற்றி மட்டும் அல்லாஹ்வின் தூதர்இவர் சுவர்க்க வாசி’ என்று கூறியுள்ளார்கள். சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறப்பட்ட 10 நபித்தோழர்களும் இவ்வாறு இறைவனால் நபிகளாருக்கு அறிவிப்புச் செய்யப்பட்டவர்களே.

நபிகளார் யாரைப் பற்றி எதுவும் சொல்லவில்லையோ அவரின் மறுமை முடிவு அல்லாஹ்விடம்  மட்டுமே உள்ளது. இதுவே ஒரு முஃமினுடைய அடிப்படை நம்பிக்கை. ஆகையால் ஒருவரை அவ்லியா என்றோ இறைநேசர் என்றோ மனிதர்கள் யாராலும்  நிச்சயமாக தீர்மானிக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை என்பது தெளிவாக நமக்கு விளங்குகிறது எனவே  அருமை சகோதர  சகோதரிகளே அவ்லியாக்கள் என்றும் தர்ஹாக்கள்ஆண்டுப்பெரு விழாக்கள்என்றும் இஸ்லாம் சொல்லித்தராதநபி வழியில் இல்லாத  கலாச்சார, அனாச்சார சீரழிவு செயல்பாடுகளில் இருந்து விலகி சத்திய இஸ்லாத்தை  இறை அச்சத்துடன்  பின்பற்றி  பிறருக்கும் எத்தி வையுங்கள் என அன்புடன்  கேட்டுக் கொள்கிறேன்.

சுன்னத்துல் ஜமாத்தை நாங்கள் தான் முறையாக பின்பற்றுகிறோம் என்று சொல்லி ஊர் மக்களை முறையாக வழி கெடுக்கும் ஆலிம்களே தயவுடன் சிந்தனை செய்து பாருங்கள்  நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நரகத்தில் ஆலிம்களையும் பெண்களையும்தான்  அதிகமாக கண்டேன் என ரசூல் (ஸல்அவர்கள் சொன்னார்கள். ஆகையால் ஊருக்கும்  , ஜமாத்துக்கும்அதன்  நிர்வாகிகளுக்கும் ,  பயப்படாமல் சத்திய  இஸ்லாத்தை முறையாக மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். அல்லாஹ்தான்  ரிஸ்கை தருபவன் என்பதைமனதில் கொண்டு சத்தியத்தை மக்களுக்கு சொல்லுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வான்.  

அருமை சகோதர சகோதரிகளே எவருடைய கருத்தையும்  ‘குர்ஆன் ஸூன்னா’ எனும் உரை கல்லில் உரசிப்பார்த்து தெரிவு செய்யும் துணிவான செயலை  நாம் கைக்கொள்ளாத வரை சத்தியத்துடன் அசத்தியத்தை இரண்டறகலந்து நம்மை  அது வழிகேட்டின் பால் அழைத்துச் சென்று விடும் என்பதை நாம் மனதில் கொண்டு சத்தியத்தை தெரிந்து முறைப்படி இஸ்லாமிய  மார்கத்தை நமது வாழ்வில் இனியாவது கடை பிடிப்போம். - Source : From Web 

வஸ்ஸலாம்
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் 
தக்கலை கவுஸ் முஹம்மது – பஹ்ரைன்
 

No comments: