Your comments

Tuesday, September 20, 2011

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

அன்புள்ள சகோதரர்களுக்கு....... அஸ்ஸலாமு அலைக்கும்  றஹ்மத்துல்லாஹி   பறகாத்துஹூ 


அஹம்பிரம்மாஸ்மி
Written  by  Jayamohan - http://www.jeyamohan.in/?p=1337 

அஹம்பிரம்மாஸ்மி என்ற ஆப்த வாக்கியத்தின்

மொழியாக்கம்தான் அது. நானே அல்லா’  
என்று அது பொருள்படுகிறது.

பக்தியை விரிவாக்கம் செய்யும்போதுதான் அனைத்து மெய்ஞானங்களையும் அனைத்து கலைகளையும்  அதற்குள் கொண்டுவரநேர்கிறது. பக்தி இயக்கம் இந்திய நிலப்பரப்பில் எல்லா பண்பாட்டுக்கூறுகளையும் தன்னுள் இணைத்து ஒன்றுடன் ஒன்று உரையாடச்செய்யும் ஒரு பொதுக்களமாக உருவாக்கம் கோண்டது. நம்முடைய தத்துவமும் இலக்கியமும் இசையும் சிற்பக்கலையும் நாம் இன்று காணும் மாபெரும் விரிவை அடைந்தது பக்தி மூலமே.

பக்தி இயக்கம் இந்தியாவுக்கு வந்த பிற மதங்களிலும் ஆழ்ந்த பாதிப்பை செலுத்தியது. குறிப்பாக பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இந்தியாவுக்கு வந்த இஸ்லாம் துருக்கிய ஆக்ரமிப்பாளர்களின் மதமாகவே இருந்தது. தொடர்ந்த போர்களும் அழிவுகளும் இஸ்லாமின் வரலால் இந்திய நிலப்பகுதியை உலுக்கின. இந்தியாவெங்கும் ஆலயங்கள் அழிக்கப்பட்டன. ஆனால் இது மன்னர்களின் இஸ்லாம். இஸ்லாம் மதத்தின் மையச்செய்தியுடன் இங்கே வந்த மெய்ஞானிகளின் இஸ்லாம் ஒன்று இருந்தது. அது எளிய மக்களின் இஸ்லாம். இறையடியார்களின் இஸ்லாம். அந்த இஸ்லாம் நம் பக்திமரபுடன் உரையாடியது. அதன் விளைவாகவே இங்கே ஸூபி பாரம்பரியம் வேரூன்றியது.

நம் பண்பாட்டின் ஒளிமிக்க முகங்களில் ஒன்றாகிய் ஸூபி மரபில் அனல் ஹக் என்னும் ஆப்த வாக்கியம் ஒன்று உள்ளது. அஹம்பிரம்மாஸ்மி என்ற ஆப்த வாக்கியத்தின் மொழியாக்கம்தான் அது. ‘நானே அல்லாஎன்று அது பொருள்படுகிறது.

யஜுர்வேதாந்தமாகிய பிருஹதாரண்யக உபநிடதத்தில் அஹம்பிரம்மாஸ்மி [நானே பிரம்மம்] - மூன்று வேதங்களின் இதயமாக விளங்குகின்ற தூய மகாவாக்கியங்களான தத்துவமஸி, அஹம்பிரம்மாஸ்மி, பிரஞ்ஞானம் பிரம்ம ஆகியவற்றிற்கு உரியதாய், பழைமையான ஆகமங்கள் கூறுகின்ற மூலாதாரம்

பக்தி வழியாகவே அந்த தரிசனத்தை ஸூபி மரபு எடுத்துக்கொண்டது. எங்கும் எதிலும் அல்லாவே இருக்கும்போத, அல்லா அன்றி பிறிது எதுவுமே பிரபஞ்சத்தில் இல்லையென்ற நிலையில் நானும் அல்லாவே என்று உணரும் பெருநிலையின் சொல்லாட்சி அது.

ஸூபிகளும் பாடினார்கள். ஆடினார்கள். கலைகளிலும் இலக்கியத்திலும் எங்கும் அல்லாவைக் கண்டார்கள். அல்லா அன்றி எதையுமே காணாத வாழ்க்கையின் ஒவ்விரு கணமும் தொழுகைநேரமே என்றும் செய்யும் ஒவ்வொன்றும் தொழுகையே என்றும்

வாழ்ந்தார்கள். அல்லாவை அப்பனாக அம்மையாக நண்பனாகக் கண்டு கனிந்தார்கள். ஏன், காதலியாகக் கண்டு 

களிகூரவும்செய்தார்கள். தன் மனதின் மணியாகிய அல்லாவைமனோன்மணியேஎன்றழைத்து குணங்குடி

மஸ்தான் சாயபு பாடிய அரிய பாடல்கள் நம் மொழியில் உள்ளன. பக்தியே பிரபஞ்சமளாவிய ஒரு பெருநிலையாக ஆகும் தளம் அது. அந்தநிலை இஸ்லாமிய மதத்தின் கட்டமைப்புக்குள் மட்டுமே நின்றவர்களால் புரிந்துகொள்ளப்படவில்லை. ஸூ·பிகள் மத மீறலுக்காக  குற்றம்சாட்டப்பட்டு  விசாரிக்கவும் தண்டிக்கவும் பட்டிருக்கிறார்கள்தக்கலை பீரப்பா அப்பா வரை அந்த வரலாற்றை நாம் காணலாம்..

எனது கருத்து :-  நான் ஏற்கனவே ஹிந்து மத தத்துவமான  " வஹ்தத்துல் வுஜூது " ( இயல்வன யாவும் இறையுருவே ) என்கிற இஸ்லாமிய விரோத சூபி கோட்பாட்டை   பீரப்பா  புலவர் எப்படியெல்லாம் தனது ஞானப்பாட்டுக்களில் கையாண்டுள்ளார் என ஆதாரங்களுடன் இதற்கு முந்தைய  பதிவுகளிலே தெளிவாக  பதிவு செய்திருந்தேன்  இப்போது  அதனோடு தொடர்புடைய இந்த அஹம்பிரம்மாஸ்மி   என்கிற தத்துவமும் ஹிந்து  மதத்தை  சார்ந்ததுதான் என்பதை ஜெயமோகனின் எழுத்துக்கள்  மூலம் நமக்கு தெரிய வருகிறது  இதுபோன்ற தத்துவங்கள் யாவும் இஸ்லாத்திற்கு விரோதமானது என்பது சந்தேகமில்லாத  உண்மையேஇந்த அஹம்பிரம்மாஸ்மி  என்ற ஹிந்து தத்துவத்தை  சூபிக்கள் ( பீரப்பாவும்) எப்படியெல்லாம்   பல வழிகளிலும் இஸ்லாத்திலே  புகுத்தியுள்ளார்கள்  என்பதனை  இதனைப் படித்தவர்கள்  புரிந்து கொள்ளமுடியும்.

இப்படிப்பட்ட இந்த சூபிக்கள் பாடினார்கள் ஆடினார்கள் கலைகளிலும்   இலக்கியங்களிலும் எங்கும் அல்லாவையே கண்டார்கள்,  மேலும்  காதலியாகவும்  கண்டு  களித்தார்கள்  என ஜெயமோகன்  குறிப்பிட்டுள்ளார்  இது போன்றே  நமது பீரப்பா புலவரும்  பாட்டுக்ககளிலும்   மற்றும்  கலை இலக்கியங்களிலும் அல்லாவை கண்டார் என்பது அவரது பாட்டுக்களே சான்று ( நீயே  இப்புவிக்குள்  ரசூலாக வந்தவன் --- நீயே உனக்கு சுஜூது செய்து கொண்டாய் - ஞானப்புகழ்ச்சி - 118 ) இந்த பாட்டுக்களில் பீரப்பா அல்லாஹ்வையே கண்டார் என மிகத்தெளிவாகவே பாடியிருக்கிறார்ஆனால் ஆடியதாக நமக்கு  தெரியவில்லை ,  அதே  சமயத்தில் , Page  190  ல் ஞானக்குறம் பாடல் பாட வேண்டிய முறை - கீர்த்தனம் , ராகம், புன்னாகவராளி,- சாப்புதானம் ஞானக்குறம் என்கிற பாட்டுத்தொகுப்பில்,  குறவன்குறத்தி  ஸ்டைலில்  சிங்கா சிங்கி என   ஆடிப் பாடக்கூடிய   பாட்டுக்களும்மேலும்  கர்நாடக சங்கீதராகதாளபல்லவியில்புன்னாகவாளிசாப்பு தானம் போன்றபாட்டுக்களும் பீரப்பா புலவர்  பாடி  சென்றிருக்கிறார் என்பதை ஞானப்புகழ்ச்சி பாட்டு தொகுப்பை  படித்து பார்த்தால் இன்னும் நன்றாக விளங்கிக் கொள்ள முடியும்இப்படிப்பட்ட ராகதாளத்தில்  காணப்படும்  பாட்டுக்களுக்கு சிலர் இனி ஆட்டம் தயார் செய்தாலும்ஆடினாலும்  ஆச்சரியப்படுவதற்கில்லை காரணம் இப்போதே இசையுடன் மாற்று மதங்களைப்போல கோயில்களில் ஒலிக்கும் சுப்ரபாதம்  போன்ற ராகங்களில்  நடனங்கள் இல்லாத ஞானப்புகழ்ச்சி பாட்டுக்கள் அடங்கிய CD தன்னை பிழிந்த தவம் என்கிற பெயரில் அபீமுஅ ஜமாத்தால்  விமரிசையாகவே அரங்கேற்றம்  செய்யப்பட்டு  வெளியிடப்பட்டுள்ளதே.
   
என் அருமை சகோதரர்களேஏன் நாம் தயங்குகிறோம் !... சற்று  நடுநிலையுடன்  கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள்  மாற்று மதக்கலாச்சாரங்கள்,  தத்துவங்கள், சடங்குகள்  என இஸ்லாத்திற்கெதிரான  வழிமுறைகளையும்  மற்றும் என்னென்ன கோட்பாடுகளை யெல்லாம்    பீரப்பா  போன்ற பலப்புலவர்களும் இஸ்லாத்தில் பெயரால் அறிவுக்கேற்ற மார்க்கமான   நமது  தூய இஸ்லாத்தில் எப்படியெல்லாம் வழிகேடுகளை புகுத்தி  விட்டிருக்கிறார்கள் என்பதனை யோசித்து பாருங்கள்... நமது மார்க்கம்  கற்றுத்தரும் பாடம் என்னஇந்த  பீரப்பா   போன்ற  புலவர்களின்  இஸ்லாத்தில் புகுத்துகிற  கோட்பாடுகள்  என்ன?  என்பதை மிக சரியாக நாம் விளங்கி கொண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில்  நாமெல்லாம் பின்பற்றுவோமேயானால்  இன்ஷா அல்லாஹ்  மறுமையில் கைசேதப்படக்கூடிய நிலைமையை நாம் தவிர்த்துக் கொள்ளலாம்.

இது போன்ற சூபிக்களின் வழி கெட்ட கொள்கை,  கோட்பாடுகளால் மாற்று மதத்தவர்கள்  நமது தூய இஸ்லாத்தை எப்படி யெல்லாம் விளங்கி  வைத்திருக்கிறார்கள்   என்பது  ஜெயமோகன் மற்றும் மாற்று மத சகோதரர்களின் பலரது கட்டுரைகள் மூலம் இனியும் நாம் மிக சரியாக விளங்கி  கொள்ள வேண்டாமா   ?   நாளை அல்லாஹ் நம்மிடம் இஸ்லாத்தை பின்பற்றாதவர்களிடம்  எப்படி உன் மார்கத்தை எத்தி வைத்தாய் என கேள்வி கேட்பானே நாம் என்ன சொல்லப் போகிறோம்?... அருமை சகோதரர்களே !... கொஞ்சம் நன்றாக சிந்தித்து பாருங்கள் , தெளிவடையுங்கள்  அறிவுக்கேற்ற   மார்கமான இஸ்லாமிய மார்கத்தை முறையாக அல்லாஹ்வும் அவனது ரசூல் (ஸல்) அவர்கள் கட்டி தந்த நேரான வழிமுறைகளில் நாமும் கடை பிடித்து மற்றவர்களுக்கும் சிறந்த முறையில் எத்தி வைப்போம்.... அல்லாஹ் நமக்கு தவ்பீக் செய்வானாக ... ஆமீன்

வஸ்ஸலாம்  
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் ............
தக்கலை கவுஸ் முஹம்மது - பஹ்ரைன்
* குறைகள் என்னை சாரும், நிறைகள் ஏக இறைவனை சாரும் ..............
படைக்கப்பட்டவர்களை விட்டு, விட்டு படைத்தவனை மட்டுமே  நாம்  வணங்குவோம்   !
* குர்ஆனை பொருளுணர்ந்து முறையாக  ஓதுவோம் ! அதனை சிந்தித்து செயல்படுவோம்
* அல்லாஹ்வும் அவனது ரசூல் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த நேர்வழியை பின்பற்றுவோம்

No comments: