بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அன்பு சகோதரர் ஹாமீம் முஸ்தபா..அஸ்ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹி வ பறகாத்துஹூ
உலகம் எங்குமுள்ள முஸ்லிம் மக்களுக்கே ( எம்மொழி பேசினாலும் சரியே ) உரித்தான, அல்லாஹ்வின் கட்டளைப்படி அருமை நாயகம் ரசூல் (ஸல்) அவர்கள் நமக்கு காட்டி தந்த, பணித்த இஸ்லாமிய முகமன்" அஸ்ஸலாமு அலைக்கும் " என்பதே நாம் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டிய அழகிய முகமன் என்பதனை எப்போதும் நீங்கள் நினைவில் கொண்டு செயல்படுமாறு மிகுந்த தோழமையுடன் அறிவுத்தியவனாக தொடர்கிறேன்
என் அருமை சகோதரரே !... அன்பான நண்பரே !.... ஒரு சம்பவம் குறித்து இருவர் விவாதிக்கும் போது, ஒருவர் மற்றொருவருடைய கருத்தை ஏற்கவோ, தகுந்த ஆதாரங்களை காட்டி மறுக்கவோ, மாற்றுக் கருத்துக்களையோ அல்லது குறைந்தபட்சம் தவறுகளை சுட்டிக்காட்டவோ செய்வதுதான் விவாதத்திற்கு உரிய முறையான, நியாயமான செயல் என்பதுவே நானறிந்தது !. இப்படிப்பட்ட விவாத முறை தற்போது எனக்கு அனுப்பியிருக்கும் உங்கள் மின்னஞ்சல் திவில் இல்லாமல் போனதில் நான் ரொம்பவும் ஏமாற்றமடைந்தேன் என்பது நிச்சயமான நிதர்சனம். ஒருவேளை நான் அப்படி உங்களிடமிருந்து எதிர்பார்த்திருக்காவிட்டால் இந்த ஏமாற்றம் ஏற்பட்டிருக்காதோ! என என் மனதில் தோன்றி அமைதியாய், குறு நகைப்புடன் என்னுள்ளேயே அது மறைந்து போயிற்று என்கிற நிதர்சனத்தையும் உங்களோடு நான் பகிர்ந்து கொண்டாகவேண்டும் .... சரி......... !. இனி உங்கள் (பதிவில் - பொதிந்து - பதிந்துள்ள ) கருத்துக்களுக்கு எனது பதில்களை இங்கே நானும் பதிவாக்குகிறேன்.
ஹமீம் முஸ்தபா :- நீங்கள் மையப்படுத்திய பிரச்சினைகள் இரண்டு அதில் 1 . வஹ்ஹாபிய நிலைப்பாடிலிருந்து தர்ஹா நம்பிக்கைகள் பற்றிய உங்கள் மதிப்பீடு 2 . பீரப்பா குறித்த உங்களின் மதிப்பீடு
கவுஸ் முகம்மத்: - அன்பு நண்பரே !... நானாக மையப்படுத்தவில்லை,.... நடக்காததையும் சொல்லவில்லை என்பது உண்மை. தூய இஸ்லாத்தின் பெயரால் நடந்த, நடக்கிற , இனியும் கோலாகாலமாக நடக்கலாம் என்கிற கலாச்சார அனாச்சார சீரழிவு செயல்களை யெல்லாம் நமது இஸ்லாத்தில் இல்லாதது, ரசூல் (ஸல்) அவர்களும் காட்டி தராதது, மேலும் எந்தவித ஆதாரங்களும் இல்லாதது என மக்கள் மன்றத்தில் மீண்டும் மீண்டும் எடுத்து வைத்து நம் இஸ்லாமிய சமூகம் சார்ந்த மக்களை சிந்தித்து பார்த்து தெளிவடைய கேட்டுக் கொள்ளும் வேண்டுகோளை என்னால் முடிந்தவரை தொடர்ந்து பல வழிகளிலும் எத்தி வைக்கிறேன் என்பதுதான் யதார்த்தம்.
அடுத்து வஹ்ஹாபிய நிலைப்பாடிலிருந்து தர்ஹா நம்பிக்கைகள் பற்றி நான் மதிப்பிடுவதாக உங்கள் கருத்தை பதிவு செய்திருப்பது , சற்றும் உண்மையில்லாத , பலரும் மிக சாதாரணமாக ஒருவரின் மேல் எடுத்து வீசக் கூடிய மிகவும் அபாண்டமான ஒரு குற்றச்சாட்டைத்தான் நீங்களும் இங்கே வீசியிருக்கிறீர்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்... காரணம் எனது அருமை தோழரே !....நான் எந்த இசத்தையும் பின்பற்றவில்லை ! எந்த இயக்கங்களையும் பின்பற்றவில்லை, தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவிலே பின்பற்ற இது போன்ற இசங்களும், இயக்கங்களும் நமக்கு தேவையில்லை என்பது இஸ்லாமிய வரலாற்று உண்மை மட்டுமல்ல இஸ்லாமுடைய அகீதா (கொள்கை) மற்றும் அனைத்து விஷயங்களிலும் குர்ஆன், மற்றும் சுன்னாஹ்வையையே ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், இதைத்தவிர எந்த இசங்களுக்கும் இஸ்லாத்தில் நிச்சயமாக இடமில்லை என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.
என்னுடைய பார்வையில் இது போன்ற இசங்களையும், இயக்கங்களையும் மக்களே தாங்களாகவே உருவாக்கி கொண்டார்கள் அல்லது பேசப்படும் நிலைக்கு தள்ளினார்கள் இதற்கு சம்மந்தப்பட்டவர்கள் ( இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் போன்றவர்கள் யாரையும் ) யாரும் பொறுப்பாக்க முடியாது காரணம் அவர்களுடைய நிலை அவர்களுடையது மட்டுமே நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு அவர்கள்தான் தன்னுடைய சொல்லுக்கும் செயலுக்கும் பதில் சொல்லுவார்கள் ( இத்தருணத்தில் நாம் பீரப்பா போன்றவர்களை அவ்லியாக்கள் என்று நாமாகவே சொல்லிக் கொள்ளும் பெரியவர்களையும், புலவர்களையும் ஞாபகப்படுத்திக் கொள்வது உகந்தது ) எனவே நாம் செய்யவேண்டியதெல்லாம் இஸ்லாம் மார்க்கம் பற்றிய பல்வேறு கருத்துக்களை நாம் அறிய வரும் போது அவைகள் குர்ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ்களின் ஆதாரங்களின் அடிப்படையில் உள்ளனவா ? என சரி பார்த்துக் கொண்டு அதன்படி நமது செயல்களை அமைத்துக் கொள்வதே சிறந்த செயலாகவும் , நன்மையான காரியமாகவும் இருக்கும்.
இங்கே நமக்கு ஒரு நியாயமான ஒரு கேள்வி எழும் !!!.. அதாவது பாமர மக்கள் , இஸ்லாமிய மார்கத்தை சரியாக தெரிந்து கொள்ளாத அல்லது அதற்குரிய ஏற்பாடுகள் இல்லாதவர்கள் இதை எப்படி சரி பார்த்துக் கொள்வார்கள் ? இதற்குரிய பதில்... ஒவ்வொரு ஜமாத்தும் இசங்கள், மற்றும் இயக்கங்கள் சாராத நன்கு படித்த , மனோ இச்சைப்படி பேசாத , நடக்காத ஆலிம்களை மட்டுமே தேர்ந்தெடுத்து , உரிய சம்பளம் கொடுத்து ஜமாஅத் மக்களின் இஸ்லாமிய சந்தேகங்களுக்கு உரிய பதில்களை குர்ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ்களின் ஆதாரங்களின் படி இஸ்லாமை நமது மக்களுக்கு எத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் மேலும் இது போல் ஏக மனதாக ஒட்டு மொத்த உலக உலமாக்களால், முபஸ்ஸிரீன்களால், அங்கீகரிக்கப்பட்ட , சரி பார்க்கப்பட்ட இஸ்லாமிய அகீதா ( கொள்கை) பற்றிய நூல்கள், குர்ஆன் தர்ஜுமாக்கள், அதன் தப்சீர்கள், அஹ்லாக்குகள் , நபிமார்களின் சரித்திரங்கள் , போன்ற இஸ்லாமிய நூல்கள் அடங்கிய ஒரு சிறந்த நூலகத்தை ஜமாத்திலே ஏற்பாடு செய்ய வேண்டும். மிக முக்கியமாக இஸ்லாமிய அகீதா சம்மந்தமான விஷயங்களை இதன் மூலம் சிறு சிறு பிரசுரங்களாக வாரத்தில் ஒருமுறை , இருமுறை என தேவைக்கேற்ப மக்களிடையே விநியோகம் செய்ய வேண்டும். இவர்ரைஎல்லாம் நாம் செய்வோமானால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் மக்களிடையே தெளிவு பிறக்கும் , சிந்திப்பார்கள் , அல்லாஹ்வும் ஹிதாயத்தை கொடுப்பான்.
உண்மை நிலை இப்படியிருக்க வஹ்ஹாபிசம், சலபிசம், சஹாபிசம், போன்ற பல இசங்கள் பற்றி நாம் விவாதிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, பயனுள்ளதும் இல்லை என்பதே என்னுடைய நிலைப்பாடு... அடுத்ததாக நீங்கள் பதிவு செய்திருப்பது பீரப்பா பற்றிய என்னுடைய மதிப்பீடு ... இங்கே என்னுடைய மதிப்பீடு என்று சொல்வதை விட யதார்த்த நிலை என்று சொல்வதே சரியானது காரணம் உண்மை செய்திகள் மட்டுமே நான் இதுவரையிலும் மக்களிடத்திலே பகிர்ந்து வருகிறேன் உண்மைகள் என்றுமே நிலையானது, நம்மால் அதை மறைக்கவோ , மறுக்கவோ முடியாது என்பது அல்லாஹ்வின் வாக்கு என்பதனை மனதில் கொண்டீர்களேயானால், இன்ஷா அல்லாஹ் , தவறான எண்ணங்கள் நீங்க செய்து தெளிவை அல்லாஹ் நிச்சயமாக தருவான் என்பதை இங்கே தோழமையுடன் பதிவு செய்து கொள்கிறேன்.
ஹமீம் முஸ்தபா :- உங்கள் கருத்துப்படி தர்ஹா, இறை நேசர்கள் இவர்கள் மீது நம்பிக்கை வைப்பவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள், இஸ்லாத்திற்கு விரோதமான செயல்களில் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை நரகத்திற்கு அழைத்து செல்லும்
கவுஸ் முகம்மத்: - அன்பு நண்பரே... ஒரு சிறு திருத்தம்..... எனது கருத்துப்படி என்பதனை மாற்றி இஸ்லாமிய அகீதா ( கொள்கை) ப்படி என்று சொல்லுங்கள் ... காரணம் அல்லாஹ்வால் மனிதர்களுக்கு அருளப்பட்டு, ரசூல் (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தி காட்டிய அறிவுக்கேற்ற மார்க்கமான இஸ்லாத்திற்கும் அதன் கொள்கைகளுக்கும் முற்றிலும் எதிரானது இந்த தர்ஹா கலாச்சாரங்களும் அனாச்சாரங்களும். மேலும் இந்த தர்ஹா நம்பிக்கை நிச்சயமாக நரகத்திற்கே அழைத்து செல்லும் என நான் என்னுடைய கருத்தாக எங்கேயுமே தெரிவித்ததில்லை ரசூல் (ஸல்) அவர்களின் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின்படியேயுள்ள, கருத்தைத்தான் நான் பல வழிகளிலும் எத்தி வைத்துக் கொண்டிருக்கிறேன். எனவே இந்த தர்ஹா சமாச்சார சீரழிவு நரகத்திற்குரியது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை..... இதோ அதற்குரிய ஆதாரங்கள்
முதலாவது ஆதாரம் :- அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: முஸ்லிம் (1609)...... அலீ (ரலி) அவர்கள் அபுல்ஹய்யாஜ் என்பவரை அழைத்து, ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக என்னை அனுப்பினார்களோ அதே பணிக்காக நான் உன்னை அனுப்பட்டுமா? நீ எந்த ஒரு சிலையைக் கண்டாலும் அதை அழிக்காமல் விட்டு விடாதே! உயர்ந்திருக்கும் எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே!'' என்று கூறினார்கள்.
இரண்டாவது ஆதாரம் :- அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் (1610) ... அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ருகள் பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மேல் கட்டடங்கள் எழுப்பப்படுவதையும் தடை செய்தார்கள்.
மூன்றாவது ஆதாரம்: - அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நஸயீ-1560).... செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.’
நாலாவது ஆதாரம் - தர்ஹா கட்டுவது கூடாது!:-
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : (இறைவனால்) படைக்கப்பட்டவரின் கப்ர் வணங்குமிடமாக ஆக்கப்படும் அளவிற்கு அது மதிக்கப்படுவதை நான் வெறுக்கிறேன். இவ்வாறு செய்பவனும், அவனுக்குப் பின்னால் வரும் மக்களும் குழப்பத்தில் சென்று விடுவார்கள் என்று (நான்) அஞ்சுவதே இதற்குக் காரணமாகும்.(ஷாஃபி மத்ஹப் நூல் : அல் முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)
பிற கலாச்சாரங்களைப் பின்பற்றும் எவரும் அவர்களைச் சார்ந்தவர்களே’ என்ற நபிமொழியைஅறிவித்தவர் : இப்னு உமர் (ரலி
தர்ஹாக்களை கட்டுபவர்கள் வேண்டுமானால் ‘நாங்கள் அவ்லியாக்களை வணங்குவதற்காக கட்டவில்லை’ என்று கூறலாம். ஆனால் குர்ஆனும், ஹதீஸும் கூறுகிறது.
*நேர்ச்சை ஒரு வணக்கமே, அதை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும்.
*பிரார்த்தனைஒருசிறந்தவணக்கமாகும்.
*முறையிடுதல்ஒருவணக்கமாகும்.
*அறுத்துப்பலியிடுதல்ஒருவணக்கமாகும்.
*பயபக்தியும்ஒருவணக்கமாகும்.
*பேரச்சமும்ஒருவணக்கமாகும்.
இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களான இவைகள் அனைத்தும் அந்த தர்ஹாக்களில் நடைபெறுவதால் அதுவும் வணங்குமிடமாகவே உள்ளது. எனவே, நிச்சயமாக இறைவனுக்கு இணை வைத்து வணங்கப்படும் இடமாகிய இந்த தர்ஹாக்களைக் கட்டியவர்கள் மேற்கூறப்பட்ட நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை நிராகரித்தவர் ஆவார்.
*நேர்ச்சை ஒரு வணக்கமே, அதை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும்.
*பிரார்த்தனைஒருசிறந்தவணக்கமாகும்.
*முறையிடுதல்ஒருவணக்கமாகும்.
*அறுத்துப்பலியிடுதல்ஒருவணக்கமாகும்.
*பயபக்தியும்ஒருவணக்கமாகும்.
*பேரச்சமும்ஒருவணக்கமாகும்.
இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களான இவைகள் அனைத்தும் அந்த தர்ஹாக்களில் நடைபெறுவதால் அதுவும் வணங்குமிடமாகவே உள்ளது. எனவே, நிச்சயமாக இறைவனுக்கு இணை வைத்து வணங்கப்படும் இடமாகிய இந்த தர்ஹாக்களைக் கட்டியவர்கள் மேற்கூறப்பட்ட நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை நிராகரித்தவர் ஆவார்.
அன்பு தோழரே !... உங்களால் முடியுமானால் (சவாலாக ஏற்றுக் கொண்டாலும் சரிதான் ) தர்ஹா கலாச்சாரங்களும் அதனை சுற்றி நடந்து வரும் அனாச்சார செயல்பாடுகளும் இஸ்லாத்தில் உள்ளதுதான் என்பதற்கு முறையான ஆதாரங்களை ( குர்ஆன் , சுன்னாஹ் அடிப்படையில் ) திரட்டி இந்த மக்கள் மன்றத்திலே பதிவு செய்ய முன் வாருங்கள் !... ஏன் நமக்குள் கருத்து வேற்றுமை ? நாம் எல்லோருமே சேர்ந்து ஒற்றுமையாக செய்வோமே !....எதையெதையெல்லாமோ உங்களை போன்ற நமது சகோதரர்கள் முயற்ச்சி செய்கிறார்கள் , ஆய்வு செய்கிறார்கள்.! .. ஏன் தோழர்களே ! இது விஷயத்தில் ஒரு ஆழமான ஆய்வை நீங்கள் மேற்கொள்ளக் கூடாது ? நல்ல விஷயம்தானே தைரியமாக சிரமம் பாராமல் முன் வாருங்கள்... இன்ஷா அல்லாஹ் ஒரு சிறு முயற்ச்சி செய்துதான் பாருங்களேன் !....
ஒரு கூடுதல் செய்தி : தர்காவைப் பற்றி இன்னும் சில செய்திகளை நீங்கள் அறிந்து கொள்வது மிக்க பயனுள்ளதாவே இருக்கும் என நான் நம்புவதால், உங்களுக்கும் ஆர்வமிருந்தால் இதோ இந்த சுட்டியை http://haiderghouse.blogspot.com/2011/09/blog-post_23.html சொடுக்கி பல தகவல்கள் அறிந்து கொள்ளலாம்
அடுத்து இறை நேசர்கள் !......, இவர்கள் யார் ? ... பீரப்பா போன்றவர்களை அவ்லியாக்கள், இறைநேசர்கள் என்றெல்லாம் நாமாகவே சொல்லிக் கொள்கிறோமே !... இவர்கள் இறை நேசர்கள் என யார் முடிவு செய்தார்கள் ?. இறைநேசர்கள் யார் என்பதையோ அல்லது ஒருவரை நல்லவரென்றோ உலகத்தில் தீர்மானிக்க முடியுமா? ....... திருமறைக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
“அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நேசர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். எதற்காகவும் கவலைப்படவும் மாட்டார்கள்.அவர்கள் விசுவாசம் கொண்டு, (இறைவனை) அஞ்சி நடப்பார்கள்.” (10:62-63)
யாருடைய உள்ளத்தில் ஈமானும் இறைவனை அஞ்சி நடக்கும் தக்வாவும் உள்ளதோ அவர்கள் அனைவரும் இறைநேசர்கள் என்று இவ்வசனம் சொல்கிறது. என் அன்பு தோழரே ! இவ்விரண்டு பண்புகளையும் மனிதக்கண்களால் எடைபோட முடியாது. உலகில் எமது பார்வையில் மகானாகத் திகழ்ந்தவர் மறுமையில் மகாபாவியாக இருக்கலாம். உலகில் எமது கண்ணோட்டத்தில் பாவியாக இருப்பவன் மறுமையில் மிகச் சிறந்த பேறுபெற்றவனாகத் திகழலாம். எனவே, ஒருவரை நல்லவர் , கெட்டவர் என்று தீர்மானிக்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரமாகும். நிச்சயமாக மனிதனால் தீர்மானிக்க முடியாது. யாரைப்பற்றி இறைவன் நபிகளாருக்கு இவர்நல்லவர் என்று அறிவித்துக் கொடுத்தானோ அவரைப்பற்றி மட்டும் அல்லாஹ்வின் தூதர் ‘இவர் சுவர்க்க வாசி’ என்று கூறியுள்ளார்கள். சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறப்பட்ட 10 நபித்தோழர்களும் இவ்வாறு இறைவனால் நபிகளாருக்கு அறிவிப்புச் செய்யப்பட்டவர்களே. ஆக நாமாகவே மனிதர்களை ஒரு குத்து மதிப்பாகவோ, அல்லது மரியாதையின் காரணமாகவோ, இறைவனைப் புகழ்ந்து பாட்டுக்கள் எழுதியதனாலோ, வேறு எந்த ஒரு காரணங்களுக்காகவோ இறை நேசர்கள் என சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது, தீர்மானிக்கவும் முடியாது. இதுவே உண்மையான இஸ்லாத்தின் நிலைப்பாடு
இஸ்லாம் நமக்கு கற்று தரும் இந்த விளக்கத்தை எப்படி? யார் ? மீறினார்கள் ? எந்த அடிப்படையில், எந்த தைரியத்தில் பலரையும் அவ்லியாவாக ஆக்கினார்கள் ? இதற்கான விடை இன்று வரை நமக்கு தெரிந்தபாடில்லை ஆனால் அறியாமையிலேயே அவ்லியாக்கள் என சொல்லப்படுகிறவர்களுக்கு ஆண்டுவிழா, திதி திவசம் போன்ற மாற்று மதத்தவர்களால் செய்யப்படும் சடங்குகளையெல்லாம் இஸ்லாமிய சாயம் பூசி , இஸ்லாத்தின் பெயரால் நாம் கொண்ட்டாடும் கொண்டாட்டங்கள் மட்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது என்பது யதார்த்தம்தானே ! . எனது கருத்துக்களை முறையான சரியான இஸ்லாத்தின் அடிப்படையில் இங்கே பதிவு செய்திருக்கிறேன் மறுப்பு இருந்தால் ???!!!!!! முறையான ஆதாரங்களுடன் உண்மைகளை இந்த மக்கள் மன்றத்திலே எடுத்து வையுங்கள் .... உங்கள் கருத்துக்கள் உண்மை என நிரூபிக்கப்படுமானால் இன்ஷா அல்லாஹ் ஒற்றுமையுடனும் மிகுந்த தோழமையுடனும் நாம் எல்லோருமே இறை நேர்சர்களுக்கு ?! விழா எடுத்து கொண்டாடுவோமே !...
குறிப்பு : இதற்கு முன்பு நான் எழுதியிருந்த கருத்துக்களுக்கு முறையான பதில்கள் உங்களிடமிருந்து கிடைக்கவில்லை. எனினும் இஸ்லாம் சம்மந்தமாக ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்தில் எழுதுவீர்கள் என இன்னும் நான் எதிர்பார்க்கிறேன். இன்ஷா அல்லாஹ் என்னுடைய அடுத்த மின்னஞ்சலில் இன்னும் எஞ்சியிருக்கும் உங்கள் எல்லா கருத்துக்களுக்கும் பதில் தர எண்ணியுள்ளேன். நல்ல பல விஷயங்களுடன், ஆதாரங்களுடன் மீண்டும் உங்களை நல்ல முறையில் தோழமையுடனும், சகோதரத்துவத்துடனும் சந்திப்பதற்கு எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் அருள் புரியட்டும் என வேண்டியவனாக................
வ ஆஹிறு .. த ஃ வானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் ........
வஸ்ஸலாம்
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் ............
தக்கலை கவுஸ் முஹம்மது - பஹ்ரைன்
* குறைகள் என்னை சாரும், நிறைகள் ஏக இறைவனை சாரும் ..............
* படைக்கப்பட்டவர்களை விட்டு, விட்டு படைத்தவனை மட்டுமே நாம் வணங்குவோம் !
No comments:
Post a Comment